ரூ.400 கோடி கேட்டு முகேஷ் அம்பானிக்கு கொலைமிரட்டல்; இளைஞர்கள் இருவர் கைது
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.
இளைஞர்கள் இருவர் கைது
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் அனுப்பிய வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. அவர்களை மும்பை குற்றப்பிரிவு பொலிஸார் கைது செய்தனர்.
அம்பானிக்கு பல கொலை மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்தன. இந்த வழக்கில் முதலில் தெலுங்கானாவைச் சேர்ந்த 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். பின்னர், மற்றொரு குற்றவாளியான ஷபாத் கான் (19) மும்பை காம்தேவி பகுதியில் கைது செய்யப்பட்டார்.
ரூ.400 கோடி கேட்டுள்ளனர்
இருவரும் முதலில் முகேஷ் அம்பானியிடம் ரூ.20 கோடி கப்பம் கேட்டனர், பின்னர் அந்த தொகையை ரூ.400 கோடியாக உயர்த்தியுள்ளனர். முன்னதாக, மின்னஞ்சல்களை அனுப்ப பயன்படுத்தப்படும் VPN நெட்வொர்க் பெல்ஜியத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்களை விசாரித்து வருவதாகவும் கிறோம், அவர்கள் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். முதலில், இது குறும்புத்தனமாகத் தெரிந்ததாகவும், ஆனால் அவர்கள் பயன்படுத்தய மின்னஞ்சல்கள் மற்றும் நெட்வொர்க் பற்றிய கூடுதல் விவரங்களை அறிய விசாரிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
முகேஷ் அம்பானிக்கு மிரட்டல் மெயில்கள்
இந்த சம்பவம் குறித்து சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், உலகின் பணக்கார தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானிக்கு அக்டோபர் 27 (வெள்ளிக்கிழமை) முதல் சனி மற்றும் திங்கட்கிழமைகளில் ஒரே மின்னஞ்சல் ஐடியில் இருந்து தொடர்ந்து மிரட்டல் மெயில்கள் வருகின்றன.
மிரட்டல் மின்னஞ்சல்கள் அனைத்தும் மீட்கும் தொகையை கோருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 400 கோடி கொடுக்கவில்லை என்றால் அம்பானியை சுட்டுக்கொல்லப்போவதாக ஒரு மெயிலில் குற்றம் சாட்டப்பட்டவர் மிரட்டியிருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Mumbai Police, Reliance Industries chairman, Reliance Industries MD Mukesh Ambani, Mukesh Ambani Threat Mails, Richest man