120 மணி நேரத்தில் ரூ.35,860 கோடி சம்பாதித்த முகேஷ் அம்பானி
இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி 120 மணி நேரத்தில் ரூ.35,860 கோடி சம்பாதித்துள்ளார்.
120 மணி நேரத்தில் வருமானம்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானிதான் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆவார். இவர், தனது பெரிய வணிக சாம்ராஜ்யங்கள் மூலம் பல வருவாய் ஆதாரங்களைக் கொண்டுள்ளார்.
இவரது ரிலையன்ஸ் நிறுவனமானது ரூ.17.48 லட்சம் கோடி சந்தை மூலதனத்துடன் இந்தியாவின் மிக மதிப்புமிக்க நிறுவனமாக உள்ளது.
கடந்த வாரம் திங்கள் முதல் வெள்ளி வரையில், அதாவது 5 நாட்கள் அல்லது 120 மணி நேரத்தில் ரூ.35,860.79 கோடி சந்தை மதிப்பு அதிகரித்துள்ளது.
ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு 101.6 பில்லியன் அமெரிக்க டொலர் ஆகும். இவர் தற்போது ஃபோர்ப்ஸ் உலக பில்லியனர்கள் பட்டியலில் 18வது இடத்தில் உள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமானது மிகவும் மதிப்புமிக்க உள்நாட்டு நிறுவனமாக இருந்து வருகிறது. இதையடுத்து, டிசிஎஸ், எச்டிஎஃப்சி வங்கி, பார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, இன்ஃபோசிஸ், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, எல்ஐசி, ஐடிசி மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகியவை அடுத்த இடங்களில் உள்ளன.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கின் விலை வெள்ளியன்று ரூ.1,291.50 ஆக இருந்தது. அடுத்த 10-15 ஆண்டுகளில் 80 பில்லியன் டாலர்களை புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் முதலீடு செய்யப்படும் என்றும், அதன் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அடுத்ததாக ஒரு புதிய வளாகத்தை கட்டும் என்று ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
2023 இல் ரிலையன்ஸ் குழுவில் இணைந்த இஷா அம்பானி, ஆகாஷ் அம்பானி மற்றும் ஆனந்த் அம்பானி இணைந்தனர். இதில், மகன் ஆகாஷ் ஜியோவுக்கு தலைமை தாங்குகிறார்.
மகள் ஈஷா சில்லறை மற்றும் நிதி சேவைகளை மேற்பார்வையிடுகிறார். மேலும் இளைய மகன் ஆனந்த் எரிசக்தி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |