முகேஷ் அம்பானியிடம் இருக்கும் 5 விலையுயர்ந்த பொருட்கள் எது தெரியுமா? லண்டனில் கூட ஒன்று
உலக கோடீஸ்வரர்களில் ஒருவராக முகேஷ் அம்பானி திகழ்கிறார்!
இவரின் ராஜபோகமான வாழ்க்கையை பற்றி கேள்விப்பட்டிருப்போம். இன்று இந்தியாவிலேயே மிக ஆடம்பரமான வீட்டில் வசித்து வரும் முகேஷ் அம்பானி, இன்னும் பல ஆடம்பரமான சுவரஸ்யமான பொருட்களை பயப்படுத்தி வருகின்றார்.
அண்டிலியா
மும்பையில் உள்ள விலையுயர்ந்த வீடுகளில் மிக ஆடம்பரமான, சொகுசு வசதிகளை கொண்ட வீடு அண்டிலியா. இது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் வீடாகும். இதன் இன்றைய மதிப்பு சுமார் 15,000 கோடி ரூபாயாகும். 27 மாடிகளை கொண்ட இந்த வீட்டில் ஹெலிபேட், ஹெல்த் கிளப், ஸ்பா, ஜிம், அவுட்டோர் கார்டன், சினிமா, பார்க்கிங், யோகா மையம், டேன்ஸ் ஸ்டுடியோ, ஐஸ் க்ரீம் பார்லர் என பல வசதிகள் உள்ளது.
ஸ்டோக் பார்க்
கடந்த 2021ல் முகேஷ் அம்பானி தனது சொத்து பட்டியலில் 79 மில்லியன் டொலர் மதிப்பிலான ஸ்டோக் பார்க்-கினை வாங்கினார். இது பிரித்தானியாவின் லண்டனில் அமைந்துள்ளது. 300 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த பார்க்கில் 27 கோல்ப் மைதானம், 13 டென்னிஸ் கோட், 3 உணவகம், 49 அறைகள், நீச்சல் குளம் உள்ளிட்ட பல என சகல அம்சங்களையும் கொண்டு, சொகுசு வசதிகளுடன் உள்ளது.
மும்பை இந்தியன்ஸ்
சர்வதேச அளவில் உள்ள மிக காஸ்டலியான ஐபிஎல் டீம்களில் மும்பை இந்தியன்ஸ் ஒன்றாகும். கடந்த 2008ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த அணி ரிலையன்ஸ் குழுமத்திற்கு சொந்தமானதாகும். இதுவரை 5 முறை பட்டம் வென்றுள்ளது. இதனை முகேஷ் அம்பானி 111.9 மில்லியன் டாலருக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.
ஏர்பஸ் ஏ319
கடந்த 2007ல் தனது காதல் மனைவி நீதா அம்பானிக்கு 44வது பிறந்த நாளில் பரிசாக முகேஷ் அம்பானி வழங்கியது தான் இந்த ஏர்பஸ் ஏ319. இதன் மதிப்பு 240 கோடி ரூபாயாகும்.
Aircraft.airbus.com/Representational image
ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன்
நடப்பு ஆண்டில் முகேஷ் அம்பானி நடப்பு ஆண்டில் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் என்ற சொகுசு காரினை வாங்கினார். உலகின் மிக சொகுசு காராக கருதப்படும் இந்த விலை உயர்ந்த காரான இது, நடமாடும் மினி சொகுசு மாளிகை என்று கூறப்படுகின்றது. இந்த காரின் விலையானது 13.14 கோடி ரூபாயாக உள்ளது.