முகேஷ் அம்பானி வருங்கால மருமகளுக்காக ஒன்று கூடிய பிரபலங்கள்! அனில் அம்பானியும் ஆஜர்.. அழகிய புகைப்படங்கள்
முகேஷ் அம்பானியின் வருங்கால மருமகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்ற நிலையில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் முகேஷின் இளைய சகோதரர் அனில் அம்பானியும் கலந்து கொண்டார். 2005 ஆம் ஆண்டு கூட்டு நிறுவனத்தை பிரித்து தனித்தனியாக தொழில்களை நடத்தும் அம்பானி சகோதரர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் பலரின் கவனத்தை ஈர்த்தது.
முகேஷ் அம்பானி மற்றும் நீடா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் வருங்கால மனைவி ராதிகா மெர்ச்சண்ட் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி பிரபலங்கள் சூழ களைகட்டியது.
இந்த விழாவில் ஏராளமான பாலிவுட் பிரமுகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் வருகை தந்து ராதிகா அவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நாட்டிய அரங்கேற்ற விழாவில் கலந்து கொண்ட பல முக்கிய தலைவர்கள், தொழிலதிபர்கள், உறவினர்கள், நண்பர்கள் என பலரும் ராதிகா மெர்சன்டை வாழ்த்தி அவருக்கு ஊக்கம் அளித்தனர்.
ராதிகா கடந்த 8 ஆண்டுகளாக பரத நாட்டியம் கற்று கொண்டு வரும் நிலையில் இந்த அரங்கேற்றம் விழா ராதிகாவின் சிறப்பாக நிகழ்வாக அமைந்தது.
Encore Healthcare நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விரேன் மெர்சண்ட்டின் மகள் தான் ராதிகா மெர்ச்சண்ட் என்பது குறிப்பிடத்தக்கது.