முதல் முறையாக முகேஷ் அம்பானி-கவுதம் அதானி இடையே வணிக ஒப்பந்தம்., 26 சதவீத பங்குகளை வாங்கிய ரிலையன்ஸ்
இந்தியாவின் முன்னணி கோடீஸ்வரர்களான முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி ஆகியோர் தங்களது முதல் வணிக ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளனர்.
கௌதம் அதானியின் மத்தியப் பிரதேச மின் திட்டத்தில் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு இப்போது பங்கு உள்ளது.
முகேஷ் அம்பானி அடானியின் நிறுவனத்தில் 26 சதவீத பங்குகளை வாங்கினார்.
இதனுடன் அதானியின் அனல்மின் நிலையங்களில் இருந்து 500 மெகாவாட் மின்சாரத்தை கேப்டிவ் பயன்பாட்டிற்கு பயன்படுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அதானி பவர் லிமிடெட்டின் துணை நிறுவனமான மஹான் எனர்ஜென் லிமிடெட்டின் (MEL) 5 கோடி பங்குகளை ரூ. 50 கோடிக்கு ரிலையன்ஸ் (RIL) எடுக்கவுள்ளது.
இதையடுத்து, கேப்டிவ் பயன்பாட்டிற்கு 500 மெகாவாட் உற்பத்தித் திறனைப் பயன்படுத்தும் என்று இரு நிறுவனங்களும் தனித்தனி பங்குச் சந்தை தாக்கல்களில் தெரிவித்துள்ளன.
குஜராத்தைச் சேர்ந்த இந்த இரண்டு தொழிலதிபர்கள் அடிக்கடி ஊடகங்களால் எதிரிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். ஆனால், அவர்களின் வியாபாரம் இதற்குக் காரணம் அல்ல.
ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் கௌதம் அதானியும் முகேஷ் அம்பானியும் பரமபத விளையாட்டை ஆரம்பித்து பல வருடங்கள் ஆகிறது.
முகேஷ் அம்பானி சில்லறை வர்த்தகம், தொலைத்தொடர்பு, எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற வணிகங்களில் ஈடுபடும் நிலையில், கௌதம் அதானி பெரும்பாலும் துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி மற்றும் சுரங்க உள்கட்டமைப்பு ஆகிய வணிகங்களில் கவனம் செலுத்துகிறார்.
clean energy விடயத்தில்தான் இவர்களுக்குள் போட்டி நிலவுகிறது. அது தவிர இருவரின் தொழில்களும் முற்றிலும் எதிர்மாறானவை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Mukesh Ambani Gautam Adani, Gautam Adani Mukesh Ambani, Reliance Industries, Adani Groups