ஆனந்த் அம்பானியின் திருமணம்... Jio வாடிக்கையாளர்களுக்கு பரிசளிக்கும் முகேஷ் அம்பானி
அதிரடி திருப்பமாக, ரிலையன்ஸ் ஜியோ அதன் பிரபலமான ப்ரீபெய்ட் திட்டங்களில் ஒன்றில் எதிர்பாராத திருத்தம் செய்து வாடிக்கையாளர்களை தம் பக்கம் ஈர்த்துள்ளது.
ரூ 349 ப்ரீபெய்ட் திட்டத்தில்
திடீர் திருப்பத்திற்கு என்ன காரணம் என கேள்வி எழுப்புவோர்களுக்கு, வாடிக்கையாளர்களின் கருத்துகளை ஜியோ நிறுவனம் செவிகொண்டுள்ளதாக கூறுகின்றனர். இதனைத் தொடர்ந்து ரூ 349 ப்ரீபெய்ட் திட்டத்தில் மாற்றங்களை செய்துள்ளது.
வெள்ளிக்கிழமை வெளியான தகவலில் ஜியோ நிறுவனம் அதன் தினசரி, மாதாந்திர மற்றும் ஆண்டுத் திட்டங்களில் பலவற்றின் விலைகளை உயர்த்திய சில வாரங்களுக்குப் பிறகு, வாடிக்கையாளர்களிடையே பிரபலமான ரூ 349 ப்ரீபெய்ட் திட்டத்தில் அதிரடி திருத்தங்களை கொண்டுவந்துள்ளது.
அதாவது தினசரி டேட்டா வரம்புகள் மற்றும் இலவச SMS எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 28ல் இருந்து 30 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் முதல் முறையாக இந்த திட்டத்தில் 5G சேவை இணைக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி, தினசரி 2GB டேட்டா என்பதால், தற்போது 60GB டேட்டா என அதிகரிக்கப்பட்டுள்ளது.
வரம்பற்ற 5G சேவை
மேலும், ஜியோவின் 5G சேவை எங்கெல்லாம் செயற்பாட்டில் உள்ளதோ அப்பகுதி வாடிக்கையாளர்கள் வரம்பற்ற 5G சேவையை பயன்படுத்தலாம்.
ஆனந்த் அம்பானியின் திருமணம் முடிந்த சில நாட்களில் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களின் கோரிக்கையை ஏற்று திருமணப் பரிசாக இந்த திருத்தத்தை கொண்டு வந்துள்ளனர்.
உண்மையில், ரூ 299 என வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வந்த சேவை தான் தற்போது ரூ 349 என மாற்றப்பட்டுள்ளது. ரூ 209 என பயன்படுத்தப்பட்டு வந்த திட்டம் ரூ 249 என உயர்த்தப்பட்டது.
மட்டுமின்றி, 84 நாட்களுக்கு ரூ 666 என அமுலில் இருந்த திட்டம் தற்போது ரூ 799 என உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |