முகேஷ் அம்பானியின் பேரனுக்கு பிறந்தநாள்! உலக கோடீஸ்வரர் கொடுத்த ஆச்சரியம்... புகைப்படங்கள்
முகேஷ் அம்பானி தனது மூத்த மகன் வயிற்று பேரனின் 2வது பிறந்தநாளை பிரம்மாண்ட முறையில் கொண்டாடியுள்ளார்.
முகேஷ் அம்பானி பேரன் பிறந்தநாள்
முகேஷ் அம்பானியின் மூத்த மகனான ஆகாஷ் அம்பானி - ஷோல்கா அம்பானியின் மகன் பிரித்வி. பிரித்விக்கு சமீபத்தில் 2 வயது பிறந்ததையொட்டி பிறந்தநாள் விழா பிரம்மாண்டமாக கொண்டாப்பட்டது.
மும்பையில் உள்ள ஜியோ கார்டனில் பிறந்தநாள் கொண்டாட்டம் களை கட்டியது. இந்த நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் குர்னல் பாண்டியா, ரோகித் சர்மா மனைவி ரித்திகா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
Varinder Chawla
உலக கோடீஸ்வரர் கொடுத்த ஆச்சரியம்
இவ்விழாவில் பலருக்கும் ஆச்சரியத்தையும் சுவாரசியத்தையும் கொடுத்தது முகேஷ் அம்பானி தான். ஏனெனில் உலக கோடீஸ்வரர்களில் ஒருவராக இருக்கும் அவர் ஜாகிங் ஆடைகளை அணிந்தபடி பேரன் பிறந்தநாளை கொண்டாடினார்.
இந்த சிறப்பு தருணத்தை எந்தவித தடங்கலும் இல்லாமல் கொண்டாட அம்பானி குடும்பம் விரும்பியதால், மைதானத்தில் பாதுகாப்பு அதிக அளவில் போடப்பட்டிருந்தது.
Varinder Chawla