முகேஷ் அம்பானி வீட்டில் பணிபுரியும் 600 வேலைக்காரர்கள்! ஒவ்வொருவரும் பெறும் மிகப்பெரிய சம்பளம்
உலகப் பணக்காரர்கள் வரிசையில் 8வது இடத்தில் முகேஷ் அம்பானி இருக்கிறார். இவர் தங்கியிருக்கும் வீடு உலகிலேயே அதிக விலை மதிக்கத்தக்க வீடுகளில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது
அதன்படி முகேஷ் அம்பானியின் வீட்டின் மதிப்பு ரூ. 15,000 கோடியாகும். மும்பையின் அண்டிலா பகுதியில் கட்டப்பட்டிருக்கும் இந்த மாளிகையில் அனைத்து விதமான வசதிகளும் இருக்கிறது.
அங்கே சுமார் 160க்கும் மேற்பட்ட கார் நிறுத்துவதற்கான இடம்,குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஹெல்த் க்ளப்,சினிமா தியேட்டர்,நீச்சல் குளம்,கோவில்,ஜிம்,ஹெலிபேடு என்ற வசதிகளுடன் இவற்றை பராமரிக்க 600க்கும் மேற்பட்ட வேலையாட்கள் இருக்கிறார்கள்.
அம்பானி வீட்டில் வேலை செய்வோருக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ஒரு வருடத்திற்கு 24 லட்ச ரூபாய். அதாவது மாதம் ரூ 2 லட்சம் ஆகும். இது மாதச்சம்பள கணக்கு மட்டும்... இடையில் அம்பானி வீட்டில் வழங்கப்படுகிற அலவன்ஸ் எல்லாம் சேர்க்கவில்லை.
முகேஷ் அம்பானி வீட்டில் பணிபுரியும் வேலையாட்கள் அனைவரும் படித்தவர்கள் தான்.
பெரும்பாலான வேலையாட்களுக்கு அதே வீட்டில் தங்குவதற்கு தனி இடம் வழங்கப்பட்டுள்ளது.