உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி பிடித்த இடம்..முதலிடத்தில் யார் தெரியுமா?
Forbes வெளியிட்டுள்ள உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவின் முகேஷ் அம்பானி 9வது இடத்தில் உள்ளார்.
வருடாந்திர உலக கோடீஸ்வரர்கள் பட்டியலை Forbes நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் கடந்த ஆண்டை விட இம்முறை பில்லியனர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
உலகளவில் 2,781 பில்லியனர்கள் உள்ளதாகவும், அதில் 141 பில்லியனர்கள் அதிகரித்துள்ளதாகவும் Forbes அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், அனைத்து பில்லியனர்களின் மொத்த மதிப்பு 14.2 ட்ரில்லியன் டொலர் என தெரிவித்துள்ளது.
Forbes-யின் டாப் 10 பட்டியலில் LVMH நிறுவனத்தின் தலைவர் பெர்னார்ட் அர்னால்ட் 233 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார்.
இரண்டாவது இடத்தில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கும் (195 பில்லியன் டொலர்), அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸும் (195 பில்லியன் டொலர்) உள்ளனர்.
இவர்களுக்கு அடுத்த இடத்தில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் 177 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் உள்ளார்.
இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனர் முகேஷ் அம்பானி 116 பில்லியன் சொத்து மதிப்புடன் 9வது இடத்தில் உள்ளார். எனினும் அவர் ஆசிய அளவில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்திய அளவில் 2ஆம் இடத்தில் உள்ள கவுதம் அதானி (84 பில்லியன் டொலர்), உலக அளவில் 17வது இடத்தில் உள்ளார்.
இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள L'Oreal நிறுவனத்தின் நிறுவனர் பேத்தியான Francoise Bettencourt Meyers, 99.5 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் உலகின் பாரிய பணக்காரப் பெண் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வால்மார்ட் நிறுவனர் சாம் வால்டன் மகள் ஆலிஸ் வால்டன் (72.3 பில்லியன் டொலர்), ஜூலியா கோச் (64.3 பில்லியன் டொலர்), ஜாக்குலின் மார்ஸ் (38.5 பில்லியன் டொலர்), ஜெஃப் பெசோஸின் முன்னாள் மனைவி மெக்கென்சி ஸ்காட் (35.6 பில்லியன் டொலர்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |