இந்திய Fashion சந்தையில் புதிய புரட்சி! முகேஷ் அம்பானி, ஈஷா அம்பானி பிரமாண்ட வணிக திட்டம்!
இந்தியாவின் மிகப்பெரிய சில்லறை நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மகள் ஈஷா அம்பானி புதிய தொழில் திட்டத்துடன் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முகேஷ் அம்பானி, ஈஷா அம்பானி புதிய திட்டம்
இந்திய ஃபேஷன் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் புதிய முயற்சியில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மகள் ஈஷா அம்பானி ஈடுபட்டுள்ளனர்.
பிரபல பிரிட்டிஷ் ஃபேஷன்(Fashion) சில்லறை விற்பனையாளர் Primark இந்தியாவிற்கு கொண்டு வர அவர்கள் முன்னேற்றமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
தற்போது உலகம் முழுவதும் 15 நாடுகளில் 439 ஸ்டோர்களைக் கொண்ட பிரபல பிரிட்டிஷ் ஃபேஷன் சில்லறை விற்பனையாளர் Primark இந்தியாவிற்கு கொண்டு வர அவர்கள் முன்னேற்றமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ட்ரெண்ட் ஆன ஆடைகள் மற்றும் அksesuraigalகளுக்கு பெயர்பெற்ற பிரிமார்க், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
இந்திய நுகர்வோருக்கு என்ன பயன்?
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பிரிமார்க் இடையேயான இந்த கூட்டு, இந்திய நுகர்வோருக்கு மலிவு விலையில் பல்வேறு ஃபேஷன் தேர்வுகளை வழங்குகிறது.
மலிவு விலையுடன் கூடிய ஆடம்பரமான ஃபேஷனில் கவனம் செலுத்தும் பிரிமார்க், இந்தியாவின் வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் style-லான, உயர்ந்த தரம் கொண்ட ஆடைகளுக்கான தேவையுடன் நன்றாக ஒத்துப் போகிறது.
விரிவாக்க திட்டங்கள்
இந்த ஒப்பந்தம் குறித்த விரிவான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை என்றாலும், பிரிமார்க்கின் இந்திய இருப்பில் பெரிய அளவிலான ஸ்டோர்-கள் இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த உத்தி, பொதுவாக ஷாப்பிங் மால்களை முன்னுரிமைப்படுத்தும் பிற உலகளாவிய சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து இதை வேறுபடுத்துகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |