எலோன் மஸ்க்கால் பேரிழப்பை சந்திக்கவிருக்கும் முகேஷ் அம்பானியின் ஜியோ
ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ தற்போது இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு ஆபரேட்டராக உள்ளது. எலோன் மஸ்க்கின் Starlink போன்ற செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்தவும் தயாராகி வருகிறது.
ஜியோ பேரிழப்பை சந்திக்கலாம்
ஆனால் எலோன் மஸ்க் காரணமாக முகேஷ் அம்பானியின் ஜியோ பேரிழப்பை சந்திக்கலாம் என்றே கூறப்படுகிறது. மிக விரைவில் எலோன் மஸ்க் இந்தியா செல்ல இருக்கிறார். அதற்கு முன்னரே, அவரது Starlink சேவைக்கு இந்திய அரசாங்கம் ஒப்புதல் அளிக்க இருப்பதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது ஒப்புதல் நடைமுறை தற்போது தகவல் தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்வையில் உள்ளது. மட்டுமின்றி, சில பாதுகாப்பு விடயங்களில் உள்விவகார அமைச்சகத்தின் இறுதி அனுமதிக்காக காத்திருக்கிறது.
மேலும், வெளிநாட்டு முதலீடு மற்றும் நிகர மதிப்பு போன்ற விடயங்களில் வணிக வாய்ப்பும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் உரிம நிபந்தனைகளுக்கு ஏற்ப தொழில்நுட்ப தேவைகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சர் வைஷ்ணவ் ஒப்புதல் அளித்துவிட்டால், இந்தியாவில் செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு சேவைகளை முன்னெடுப்பதற்கான GMPCS உரிமம் வழங்கப்படும். 2022 நவம்பர் மாதம் GMPCS உரிமம் பெறும் பொருட்டு எலோன் மஸ்க் முயன்றுள்ளார்.
ஆனால் சில காரணங்களால் அந்த திட்டம் நிறைவேறாமல் போயுள்ளது. இந்த நிலையில் இந்திய அரசாங்கம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொலைத்தொடர்பு மசோதா 2023ஐ நிறைவேற்றியது.
3 பில்லியன் டொலர் முதலீடு
இதனால் ஏலத்தில் பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லாமல் செயற்கைக்கோள் அடிப்படையிலான சேவைகளுக்கான அலைக்கற்றை ஒதுக்கீட்டை ஒரு நிறுவனம் பெற முடியும்.
இந்த மசோத OneWeb, Starlink, மற்றும் Kuiper ஆகிய நிறுவனங்களுக்கு தற்போது சாதகமாக அமைந்துள்ளது. மிக விரைவில் இந்தியாவுக்கு வருகை தரவிருக்கும் எலோன் மஸ்க் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவும் இருக்கிறார்.
அத்துடன் Starlink சேவையின் துவக்கம் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் 3 பில்லியன் டொலர் முதலீடு குறித்தும் அவர் அறிவிப்பார் என்றே கூறப்படுகிறது.
ஏலத்தில் கலந்து கொள்ளாமல் எலோன் மஸ்க் ஒப்பந்தம் பெறுவதால், Starlink போன்ற சேவையை முன்னெடுக்க தயாராகும் ஜியோ கடும் போட்டியை எதிர்கொள்வதுடன், ஜியோ இழப்பையும் சந்திக்க இருக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |