100 Billion Dollar Clubல் இணைந்த முகேஷ் அம்பானி., உலக பணக்காரர்கள் பட்டியலில் 11வது இடம்
முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 105.1 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது.
இந்நிலையில் அவர் Bloomberg Billionaires Index பட்டியலில் அம்பானி 11வது இடத்தில் உள்ளார்.
முகேஷ் அம்பானியின் நிறுவனமான Reliance Industries பங்குகள் இன்று (ஜனவரி 11) பம்பர் உயர்வு ஏற்பட்டுள்ளது. Reliance பங்குகள் இன்று இரண்டு சதவீதத்திற்கும் அதிகமான உயர்வுடன் வரலாறு காணாத உயர்வை எட்டியுள்ளன.
இதன் காரணமாக முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது. முகேஷ் அம்பானி 100 பில்லியன் டொலர் பணக்காரர்களின் கிளப்பில் (100 Billion Dollar Club) இணைந்துள்ளார்.
Forbes Real-Time Billionaires List-ல் இருந்து Reliance தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 105.1 பில்லியனை எட்டியுள்ளது என்பதைக் காட்டுகிறது.
உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 11வது இடத்தில் உள்ளார். ஃபோர்ப்ஸ் பட்டியலில் 100 பில்லியன் டாலர் கிளப்பில் 12 பில்லியனர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர்.
வேகமாக அதிகரித்துவரும் அம்பானியின் சொத்து
கடந்த இரண்டு வர்த்தக அமர்வுகளில் RIL பங்குகள் 5.4% கூர்மையான உயர்வைக் கண்டுள்ளன. இதனால் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது.
ரூ.2,724.95 என்ற புதிய உச்சத்தைத் தொட்ட பிறகு, ரிலையன்ஸ் பங்குகள் இன்று BSEயில் 2.6% உயர்ந்து ரூ.2,718.40-ல் முடிந்தது.
இதற்கிடையில், RILன் சந்தை மூலதனமும் ரூ.18 லட்சம் கோடி என்ற மைல்கல்லை கடந்துள்ளது.
கடந்த ஆண்டு, குழு அதன் NBFC பிரிவான ஜியோ நிதி சேவைகளை (JFSL) ஒரு தனி பட்டியலிடப்பட்ட நிறுவனமாக மாற்றியது. JFSL பங்கும் 4.7% உயர்ந்து 251.50 ரூபாயில் முடிந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Mukesh Ambani joins 100 billion dollar net worth club, 100 billion dollar club, Mukesh Ambani, RIL, Reliance Industries, Bloomberg Billionaires Index, Indian Businessman Mukesh Ambani, Indias Richest man, Asias Richest Man, Business News