முகேஷ் அம்பானி மகன் மற்றும் மகளின் வருமானம் எவ்வளவு தெரியுமா?
இந்தியாவின் முன்னணி பணக்காரரான முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி தம்பதிகளின் குழந்தைகளான ஆனந்த், இஷா மற்றும் ஆகாஷ் அம்பானிகளின் வேலை மற்றும் ஊதியம் குறித்த தகவல்கள் இந்த செய்தி தொகுப்பில் விவரிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் தொழில் நிறுவனத்தின் அடுத்த வாரிசுகள்
இந்தியாவின் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸின் உரிமையாளர்களான முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி ஜோடி தங்களது சிறப்பான வணிகத்தின் மூலம் ஆசியாவின் முன்னணி தொழிலதிபர்களாக திகழ்ந்து வருகின்றனர்.
மிகப் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி ஜோடியின் தொழில் சாம்ராஜ்யத்தை தொடர்ந்து வழிநடத்த அவர்களது குழந்தைகளான ஆனந்த், இஷா மற்றும் ஆகாஷ் அம்பானிகளும் தயார் நிலையில் உள்ளனர்.
ஆனந்த், இஷா மற்றும் ஆகாஷ் ஆகிய மூன்று அம்பானிகளும் தலைசிறந்த படிப்புகளை படித்து இருப்பதுடன், தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்தின் தொழிலையும் முன் நகர்த்தி கொண்டு செல்லும் பணியில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
ஆனந்த் அம்பானி
ஆனந்த் அம்பானி, அமெரிக்காவின் புகழ்பெற்ற பிரவுன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர், இவர் தற்போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவராகவும், ஜியோ டெலிகாம் மற்றும் ஜியோ சினிமா ஆகியவற்றின் பொறுப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார்.
பொதுவாகவே அம்பானிகளின் வருமானம் வெளியிடப்படாத நிலையில், தோராயமாக கடந்த மாதம் மட்டும் ஆனந்த் அம்பானியின் வருமானம் 45 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது.
இஷா அம்பானி
இஷா அம்பானி தனது சகோதரர் போலவே அதிக வணிக ஆர்வம் கொண்டவர், இவர் அமெரிக்காவில் உள்ள நிறுவனத்தில் உயர் பதவியில் பணிபுரிந்துள்ளார்.
இவர் பயிற்சி பெற்ற வணிக ஆய்வாளர் மற்றும் ஆலோசகராகவும் இருந்து வருகிறார், இவர் தற்போது ரிலையன்ஸ் ரீடெய்ல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் ஆகியவற்றின் இயக்குநராக செயல்பட்டு வருகிறார்.
இவரது கடந்த மாத வருமானம் 35 லட்சம் என கணிக்கப்பட்டுள்ளது.
ஆகாஷ் அம்பானி
ஆகாஷ் அம்பானி ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆற்றல் பிரிவின் தலைவராகவும் ஜியோ இயங்குதளங்கள் மற்றும் ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் ஆகியவற்றின் நியமன குழு உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார்.
இவரது கடந்த மாத வருமானம் 35 லட்சம் என தோராயமாக கணக்கிடப்பட்டுள்ளது.