ஆபரேஷன் சிந்தூரை நடத்திய இந்திய இராணுவத்தை நினைத்து பெருமைப்படுகிறேன்: முகேஷ் அம்பானி
ஆபரேஷன் சிந்தூரை நடத்திய இந்திய இராணுவத்தை நினைத்து பெருமைப்படுவதாக இந்திய தொழிலதிபரும் கோடீஷ்வரருமான முகேஷ் அம்பானி கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய இராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலான "ஆபரேஷன் சிந்தூர்" உலகமே கவனிக்கும்படி செய்துள்ளது.
இந்திய இராணுவம், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான்-ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் ஏப்ரல் 22ஆம் திகதி பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கான பதிலாக நடைபெற்றது. அந்த தாக்குதலில் 26 பொதுமக்கள் உயிரிழந்தனர்.
இந்தியாவின் இந்த வீரத் தாக்குதலை பாராட்டி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது: "ஆபரேஷன் சிந்தூரை மிகுந்த பெருமையுடன் பாராட்டுகிறோம். பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா உறுதியுடன் நிற்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் வலிமையான தலைமைத்துவத்தினால், எல்லை கடந்த எந்தத் தாக்குதலையும் மன்னிக்காமல், துல்லியமாக பதிலடி கொடுக்கின்றோம்."
"இந்தியாவின் பாதுகாப்பு, மதிப்பு, மற்றும் தனியுரிமைக்கு எந்தவிதமான ஆபத்தும் வந்தால் அதை எதிர்க்க நாம் தயாராக இருக்க வேண்டும். இந்தியா அமைதியை விரும்புகிறது, ஆனால் அது அதன் கௌரவத்திற்கும் பாதுகாப்பிற்கும் விலை கொடுக்காது. ஜெய்ஹிந்த்!" என்றும் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |