ரூ 15,000 கோடியில் உருவான Antilia மாளிகை... ஒரே ஒரு காரணம் 27வது மாடியில் வசிக்கும் முகேஷ் - நீதா தம்பதி
பூமியிலேயே பெரும் செலவில் கட்டி முடிக்கப்பட்ட தனியார் குடியிருப்புகளில் ஒன்று முகேஷ் அம்பானி வசிக்கும் Antilia மாளிகை.
அம்பானியின் மாளிகையும்
இந்த 27 மாடிகள் கொண்ட மாளிகையில் தான் முகேஷ் - நீதா தம்பதியும், அவர்களின் பிள்ளைகள் மூவரும் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். 4 லட்சம் சதுர அடி கொண்ட இந்த மாளிகைக்கு மொத்தம் ரூ 15,000 கோடி செலவிட்டுள்ளனர்.
மிகவும் பிரபலமான இரண்டு அமெரிக்க கட்டுமான நிறுவனங்களே வரைபடம் தயாரித்து கட்டுமானத்தையும் முன்னெடுத்துள்ளது. அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள பாண்டம் தீவின் பெயரால் முகேஷ் அம்பானியின் மாளிகையும் ஆன்டிலியா என்று அழைக்கப்படுகிறது.
இந்த 27 மாடி சொகுசு மாளிகையில் 3 ஹெலிகொப்டர் தரையிறங்கும் வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாளிகையானது 173 மீற்றர் உயரமும் அளவில் 37,000 சதுர மீற்றர் எனவும் கூறப்படுகிறது.
உள்கட்டமைப்பு தொடர்பில் இதுவரை புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த 27 மாடி மாளிகையில் பல அடுக்கு வாகன நிறுத்த வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 9 அதிவேக லிஃப்ட் வசதியும் ஊழியர்களுக்கான சிறப்பு அறைகளும் உருவாக்கப்பட்டுள்ளது.
நெருங்கிய உறவினர்கள் மட்டுமே
Antilia மாளிகையின் 25 தளங்களை தவிர்த்து, முகேஷ் அம்பானியும் நீதாவும் பிள்ளைகளும் என மொத்த குடும்பமும் 27வது மாடியில் வசித்து வருகின்றனர்.
ஒவ்வொரு அறையிலும் போதுமான இயற்கை வெளிச்சம் மற்றும் சரியான காற்றோட்டம் இருக்க வேண்டும் என்பதால், நீதா அம்பானி 27வது மாடியில் வசிக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
மேலும், கட்டிடத்தின் 27வது மாடியில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் கூறப்படுகிறது. Antilia மாளிகையானது தெற்கு மும்பையின் மையத்தில் அமைந்துள்ளது.
மட்டுமின்றி, ரிக்டர் அளவில் 8.0 என பதிவாகும் மிக மோசமான நிலநடுக்கம் வந்தாலும், எந்த பாதிப்பும் இந்த கட்டிடத்திற்கு ஏற்படாது என்றே கூறப்படுகிறது. அத்துடன் Antilia மாளிகையானது 600க்கும் மேற்பட்ட பணியாளர்களால் பராமரிக்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |