வெறும் 48 மணி நேரத்தில் ரூ 80,000 கோடியை இழந்த முகேஷ் அம்பானி
இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்ததை அடுத்து, முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் குறிப்பிடத்தக்க இழப்பை சந்தித்துள்ளது.
சுமார் ரூ 80,000 கோடி
செப்டம்பர் 30 அன்று, சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் வரையில் சரிந்தது, இதனால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களை பாதித்தது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் கடும் சரிவை எதிர்கொண்டதால், சந்தை மதிப்பில் சுமார் ரூ 80,000 கோடி இழப்பு ஏற்பட்டது.
அன்றைய நாள் ரிலையன்ஸ் பங்குகளின் விலையில் 3 சதவிகிதம் வரையில் சரிவு ஏற்பட்டது. இதே நிலை தொடர்ந்து நீடிக்க, ரிலையன்ஸ் பங்கு விலையில், மேலும் 0.89 சதவிகிதம் சரிவு ஏற்பட்டது. இதனால் திங்களன்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ 67,000 கோடி என சரிந்தது.
செவ்வாய்க்கிழமை இன்னொரு 12,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக ரிலையன்ஸ் பங்கு விலையில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்கள் முதலீட்டாளர்கள் மத்தியில் கலவையான எதிர்வினையை உருவாக்கியது.
தொடர்ந்து ஆறு அமர்வுகள்
பலர் ரிலையன்ஸ் பங்குகளில் இழப்பை சந்தித்தனர். திங்களன்று ஆரம்ப வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது, மற்றும் நிஃப்டி குறியீடு சுமார் 300 புள்ளிகள் சரிந்தது.
வங்கி, வாகனம், நிதி சேவைகள் மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற முக்கிய துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த மோசமான சரிவுக்கு முன், இந்திய பங்கு குறியீடுகள் லாபத்தை அனுபவித்து வந்தன, சந்தை தொடர்ந்து ஆறு அமர்வுகள் அதிகபட்ச லாபத்தை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |