ரிலையன்ஸ் நிறுவனத்தில் நீதா அம்பானியின் சம்பளம் இது தான்... முகேஷ் அம்பானியின் ஊதியம்?
ஆசியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி தமது ரிலையன்ஸ் நிறுவனத்தில் இருந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக சம்பளம் பெற்றுக்கொள்ளாத நிலையில், அவரது மனைவி நீதா அம்பானி பெறும் சம்பளம் உள்ளிட்ட முக்கிய தரவுகள் வெளியாகியுள்ளது.
கடந்த 2021 முதல்
முகேஷ் அம்பானி முன்னெடுத்து நடத்தும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனங்களில் இருந்து கடந்த 2021 முதல் சம்பளம் எதுவும் அவர் பெற்றுக்கொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது.
94.6 பில்லியன் டொலர் சொத்து மதிப்பு கொண்ட முகேஷ் அம்பானி, 2022-2023 நிதி ஆண்டில் சம்பளமே பெறாத ஊழியராக பதிவு செய்துள்ளார். ஆனால் 2008- 2009 நிதி ஆண்டில் ரூ.15 கோடி சம்பளமாக பெற்றுக்கொண்டுள்ளார்.
2020 வரையில் ஆண்டுக்கு 15 கோடி சம்பளமாக பெற்று வந்துள்ளார். அதன் பின்னர் 2021ல் தமக்கு சம்பளம் வேண்டாம் என அவரே கைவிட முன்வந்துள்ளார். தமது தந்தையின் மறைவுக்கு பின்னர் 2022 ஜூலை முதல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனங்களின் தலைவராக முகேஷ் அம்பானி செயல்பட்டு வருகிறார்.
ஆண்டுக்கு 6 லட்சம்
மட்டுமின்றி, ரிலையன்ஸ் நிறுவனத்தில் தனது பங்கிற்கு அலவன்ஸ், முன்நிபந்தனைகள், ஓய்வூதிய பலன்கள், கமிஷன் அல்லது பங்கு வாய்ப்புகள் எதையும் முகேஷ் அம்பானி பெறவில்லை என்றே கூறப்படுகிறது.
ஆனால் முகேஷ் அம்பானியின் உறவினர்கள் நிகில் மற்றும் ஹிதல் மெஸ்வானி ஆகிய இருவரும் ஆண்டுக்கு 25 கோடி சம்பளமாக பெறுகின்றனர். நிர்வாக இயக்குனர் பிஎம்எஸ் பிரசாத் ஆண்டுக்கு 13.50 கோடி சம்பளமாக பெறுகிறார்.
ஆனால் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி ஆண்டுக்கு 6 லட்சம் சம்பளமாக பெறுகிறார். அத்துடன் கடந்த நிதியாண்டில் ரூ.2 கோடி கமிஷனாக பெற்றுள்ளார் என்றே தெரியவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |