உலகின் மிகப்பெரிய மாம்பழ ஏற்றுமதியாளர்... முகேஷ் அம்பானியின் அறியப்படாத தொழில்: அதன் பின்னணி
பெட்ரோலியம், தொலைத்தொடர்பு மற்றும் சில்லறை வர்த்தகத்தில் கோலோச்சும் முகேஷ் அம்பானி உலகின் மிகப்பெரிய மாம்பழ ஏற்றுமதியாளர் என்பது பரவலாக அறியப்படாத ஒன்று.
அம்பானி எதிர்கொண்ட விதம்
முகேஷ் அம்பானியின் தலைமையின் கீழ் இயங்கும் ரிலையன்ஸ் குழுமம், உலகின் மிகப்பெரிய மாம்பழ ஏற்றுமதியாளராக விளங்குகிறது. இதன் பின்னணியும், எழுந்த எதிர்ப்பும், அதை முகேஷ் அம்பானி எதிர்கொண்ட விதவும் தான், அவர் புகழுக்கு மேலும் சிறப்பு சேர்த்துள்ளது.
1997ல் குஜராத்தில் உள்ள ஜாம்நகர் சுத்திகரிப்பு ஆலையில் ரிலையன்ஸ் நிர்வாகம் கடுமையான மாசு பிரச்சினைகளை எதிர்கொண்டது. சுற்றுச்சூழல் நெருக்கடிகள் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் எச்சரிக்கைகளை நிவர்த்தி செய்ய ரிலையன்ஸ் நிர்வாகம் ஒரு முடிவுக்கு வந்தது.
அதாவது சுத்திகரிப்பு நிலையத்தைச் சுற்றியுள்ள தரிசு நிலங்களை பசுமையான மாம்பழ தோட்டமாக மாற்ற ரிலையன்ஸ் முடிவு செய்தது. இந்த முன்முயற்சியானது மாசுபாட்டைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டதுடன் தொழில்துறை பகுதியைச் சுற்றி ஒரு நிலையான பசுமை மண்டலத்தையும் உருவாக்கியது.
மொத்தமாக 600 ஏக்கரில் 1.3 லட்சம் மரங்கள் இந்த தோட்டத்தில் அமைந்துள்ளது. மட்டுமின்றி, 200 வகையான மாம்பழங்கள் பயிரடப்பட்டுள்ளது. மேலும் 16ம் நூற்றாண்டில் முகலாய பேரரசர் அக்பரின் மாம்பழ தோட்டத்தின் பெயரையே தமது தோட்டத்திற்கும் முகேஷ் அம்பானி சூட்டியுள்ளார்.
600 டன் உயர்தர மாம்பழங்கள்
மட்டுமின்றி, பழத்தோட்டத்தின் வெற்றியை உறுதி செய்வதற்காக நீர் சேகரிப்பு, சொட்டு நீர் பாசனம் மற்றும் ஒரே நேரத்தில் உரமிடுதல் போன்ற மேம்பட்ட விவசாய நுட்பங்களையும் பயன்படுத்தியுள்ளனர்.
இந்தியாவில் பிரபலமான கேசர், அல்போன்சா, ரத்னா, சிந்து, நீலம் மற்றும் அம்ரபாலி ஆகிய வகைகளுடன் வெளிநாட்டு மாம்பழ வகைகளும் இங்கு பயிரடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், சுமார் 600 டன் உயர்தர மாம்பழங்களை உற்பத்தி செய்கிறது. இது உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் விற்கப்படுவதுடன், ஆசியாவின் மிகப்பெரிய மாம்பழ ஏற்றுமதியாளராக ரிலையன்ஸை உருவாக்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |