இதுவரை ரூ 86 கோடி... ஜனாதிபதி ட்ரம்புடன் கூட்டணி அமைத்த முகேஷ் அம்பானி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான முகேஷ் அம்பானி கூட்டணி வைத்துக்கொண்டுள்ளார்.
ட்ரம்பின் ரியல் எஸ்டேட்
முகேஷ் அம்பானியின் Reliance 4IR Realty Development நிறுவனம் ட்ரம்ப் நிறுவனத்திற்கு இதுவரை மேம்பாட்டு கட்டணம் என ரூ 86 கோடி செலுத்தியுள்ளது. ட்ரம்பின் நிறுவனமானது மும்பை நகரில் உரிமம் வாங்குவதற்கு முகேஷ் அம்பானி செலவு செய்துள்ளார்.
இந்தக் கட்டணத்துடன், ஜனாதிபதி ட்ரம்பின் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் முதலீடு செய்யும் பல வெளிநாட்டு நிறுவன உரிமையாளர்களுடன் முகேஷ் அம்பானி இணைந்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியின் வருடாந்திர நிதி தொடர்பான அறிக்கையின்படி, வியட்நாம், துபாய், சவுதி அரேபியா மற்றும் பிற நாடுகளில் ட்ரம்ப் பிராண்டுடன் திட்டங்களுக்குத் தயாராகும் முதலீட்டாளர்கள் 2024 ஆம் ஆண்டில் ட்ரம்ப் அமைப்புக்கு வெளிநாட்டு உரிமம் மற்றும் மேம்பாட்டுக் கட்டணமாக 44.6 மில்லியன் டொலர் செலுத்தியுள்ளனர்.
ஆனால், முகேஷ் அம்பானியின் நிறுவனம் ட்ரம்ப் அமைப்புக்கு செலுத்திய ரூ 86 கோடி கட்டணம், மும்பையில் எந்த குறிப்பிட்ட திட்டத்திற்கு ரிலையன்ஸ் பணம் செலுத்தியது என்ற தகவல் வெளியாகவில்லை.
அமெரிக்க ஜனாதிபதியுடன் பலமுறை நேரிடையாக சந்தித்துப் பேசியுள்ளதன் பின்னரே முகேஷ் அம்பானியின் இந்த கூட்டணி தொடர்பிலான தகவல்கள் கசிந்துள்ளது. ஆனால் ரிலையன்ஸ் நிர்வாகம் இதுவரை இந்த விவகாரம் தொடர்பில் விளக்கமளிக்கவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |