முகேஷ் அம்பானியின் ஒரு மாத செலவு.., எத்தனை கோடி தெரியுமா?
உலகளவில் பெரும் பணக்காரர்களுள் ஒருவராக இருக்கும் முகேஷ் அம்பானிக்கு எண்ணிலடங்கா தொழில்கள் இருக்கின்றன.
இவரது பிள்ளைகள், மனைவி நீடா அம்பானி என அனைவருமே பெரும் தொழிலதிபர்களாக இருக்கின்றனர்.
அம்பானி, தனது குடும்பத்தாருடன் மும்பையில் இருக்கும் ரூ.15000 கோடி மதிப்புள்ள ஆண்டிலியா எனும் வீட்டில் தங்கியிருக்கிறார்.
மும்பையில் உள்ள பிரம்மாண்டமான அவரது ஆண்டிலியா வீட்டை பராமரிப்பதற்கு மட்டுமே பல கோடி ரூபாய் செலவாகிறது.
ஆண்டிலியா வீட்டில் பணிபுரியும் சில ஊழியர்களின் சம்பளம் மட்டுமே ஒரு மாதத்திற்கு 2 லட்சத்திற்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
அந்த வீட்டில் ஒட்டுமொத்தமாக சுமார் 600க்கும் மேற்பட்டோர் பணிபுரியும் பணியாளர்களின் மாத சம்பளம் மட்டுமே கிட்டத்தட்ட 12 கோடி ரூபாயை தாண்டுகிறது.
மேலும், வீட்டின் பராமரிப்பிற்கும் தனியாக 15 கோடி ரூபாய் செலவாவதாக கூறப்படுகிறது.
அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் தினசரி அணியும் ஆடைகளுக்கு ஒரு மாதத்திற்கு 5 கோடிக்கு மேல் செலவாக மதிப்பிடப்படுகிறது.
முகேஷ் அம்பானி பயணிக்கும் தனி விமானத்திற்கான செலவு மட்டுமே ஒரு மாதத்திற்கு 10 கோடி ரூபாய்க்கு மேல் ஏற்படுகிறது.
அம்பானியின் பாதுகாப்பிற்காக மட்டுமே ஒரு மாதத்திற்கு மூன்று கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்கின்றனர்.
ஒரு ஹோட்டலில் போய் அம்பானி சாப்பிட்டு வந்தாலே குறைந்தது 10 லட்சம் முதல் 20 லட்சம் வரை செலவாகும்.
அம்பானி வீட்டில் நடக்கும் விருந்துகளுக்கு முக்கிய பணக்காரர்களும் வந்து செல்கின்றனர். இதனுடைய செலவு மட்டுமே பல கோடிகள் இருக்கலாம்.
இந்நிலையில், அம்பானி மற்றும் அவர்கள் குடும்ப உறுப்பினர்களால் செய்யப்படும் செலவுகள் மட்டுமே 50 முதல் 60 கோடி வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இருப்பினும் இது அவர்களின் தனிப்பட்ட செலவுகள் மட்டுமே, வணிக செலவுகள் இதில் சேர்க்கப்படவில்லை.
அதன்படி பார்த்தால் முகேஷ் அம்பானியின் குடும்பம் தினசரி ஒன்றரை கோடி முதல் இரண்டரை கோடி வரை செலவு செய்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |