42,000 ஊழியர்களுக்கு ஒரேயடியாக வேட்டு வைத்த முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ்
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் 2024 நிதியாண்டில் மொத்தமாக 42,000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விவாதிக்கப்படவில்லை
குறித்த விவகாரத்தை சமூக ஊடகங்கள் அல்லது செய்தி நிறுவனங்கள் என எவரும் கண்டுகொள்ளவில்லை என்பதுடன் பொதுமக்கள் தரப்பிலும் விவாதிக்கப்படவில்லை என்பது கவலை அளிப்பதாக Shaadi.com நிறுவனரான அனுபம் மிட்டல் குறிப்பிட்டுள்ளார்.
2024 நிதியாண்டில் ரிலையன்ஸ் நிறுவனமானது தங்கள் ஊழியர்களில் 11 சதவிகிதத்தை குறைக்க உள்ளது. அதாவது 42,000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்க உள்ளது.
வருடாந்தர அறிக்கை
இதனால் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கை 389,000 என இருந்தது 347,000 என குறையும்.
ரிலையன்ஸ் குழுமத்தின் சில்லறை வர்த்தக நிறுவனங்களில் இருந்தே ஊழியர்களை பெருவாரியாக நீக்க உள்ளனர். மட்டுமின்றி, புதிதாக வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள் எண்ணிக்கையும் சரிவடைந்துள்ளதாகவே வருடாந்தர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |