49 படுக்கையறைகள் உள்ளது! பிரித்தானியாவில் ஆடம்பர விடுதியை வாங்கிய முகேஷ் அம்பானி- என்ன விலை தெரியுமா?
பிரித்தானியாவில் உள்ள ஸ்டோக் பார்க் ஆடம்பர விடுதியை இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி 57 மில்லியன் பவுண்டுகள் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளார்.
அதாவது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தான் இவ்வளவு பெரிய விலையை கொடுத்து வாங்கியுள்ளது.
Buckinghamshireல் 300 ஏக்கர் நிலப்பரப்பின் நடுவே 49 படுக்கையறைகளுடன் கூடிய ஆடம்பர விடுதி பழைமை வாய்ந்ததாகும்.
தோட்டத்தில் கோல்ப் திடல், 13 டென்னிஸ் ஆடுகளங்கள், 14 ஏக்கரில் அரியவகைத் தாவரங்களுடன் கூடிய பூங்கா ஆகியன உள்ளன.
புகழ்பெற்ற ஜேம்ஸ்பாண்டு திரைப்படங்கள் இங்குப் படம் பிடிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஸ்டோக் பார்க் எஸ்டேட் 900 ஆண்டுகளுக்கும் மேலாக பதிவு செய்யப்பட்ட வரலாற்றைக் கொண்டிருந்தாலும், 1908 வரை இது ஒரு தனியார் இல்லமாக பயன்படுத்தப்பட்டது என்று அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் தெரிவித்துள்ளது.