மாம்பழம் தொழிலையும் விட்டுவைக்காத அம்பானி! விவசாயத்தில் கால் பதித்து அசுர சாதனை
இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி விவசாயத்தில் கால் பதித்து பெரும் உச்சத்தை எட்டியுள்ளார்.
மாம்பழம் விற்பனை
பெட்ரோலியம், டெலிகம்யூனிகேஷன்ஸ், ரீடெய்ல் ஆகிய துறைகளில் சாதனை புரிந்த முகேஷ் அம்பானி விவசாய துறையிலும் சாதனை புரிந்துள்ளார்.
அவரது தலைமையின் கீழ் இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RELIANCE INDUSTRIES LTD) உலகின் மிகப்பெரிய மாம்பழ ஏற்றுமதி நிறுவனமாக உயர்ந்துள்ளது.
குஜராத் ஜாம்நகரில் உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் மாசுபாடு பிரச்சனை எழுந்தபோது, மாசு கட்டுப்பாடு வாரியம் விதித்த நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்காக புதிய திட்டத்தில் ரிலையன்ஸ் இறங்கியது.
அதாவது ஜாம்நகரை சுற்றியுள்ள வறண்ட நிலத்தை மாந்தோப்பாக மாற்ற முடிவு செய்தது. ஆலை அடங்கிய பகுதியை பசுமையாக மாற்ற முடிவு செய்தது.
ரிலையன்ஸ் நிறுவனர் திருபாய் அம்பானி பெயரில் 600 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட இந்த மாந்தோப்பில் 1.3 லட்சம் மாஞ்செடிகள் வளர்க்கப்பட்டன. சுமார் 200 வகையான செடிகள் நடப்பட்டன.
அப்பகுதியில் இருக்கும் உப்பு மற்றும் காரத்தன்மையை பொருத்து தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன. மேலும் அங்கு தண்ணீர் சுத்திகரிப்பு ஆலைகள் அமைக்கப்பட்டு தண்ணீர் சேகரிப்பு, சொட்டுநீர் பாசனம், சிறந்த உரங்கள் மூலம் மாந்தோப்பு பராமரிக்கப்பட்டது.
குறிப்பாக கேசார், அல்போன்சா, ரத்னா, சிந்து, நீலம், அமராபல்லி ஆகிய ரகங்கள் விளைவிக்கப்பட்டன. இங்கு ஆண்டுக்கு 600 டன் பிரீமியம் மாம்பழங்கள் விளைந்தன.
இதனால் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனமாக ரிலையன்ஸ் மாறியது.
இதையடுத்து, ஆண்டுதோறும் ஒரு லட்சம் மாஞ்செடிகளை உள்ளூர் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. அவர்களுக்கு சிறந்த தொழில்நுட்ப பயிற்சியும் வழங்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |