ஜேர்மன் நிறுவனத்திற்கு ரூ.1000 கோடி செலுத்திய அம்பானியின் Reliance நிறுவனம்
இந்தியாவில் Metro பிராண்ட் பெயரை பயன்படுத்த Reliance Industries நிறுவனம் கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் செலுத்தியுள்ளது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries) நிறுவனம் ஜேர்மனியின் பன்னாட்டு நிறுவனமான Metro AGக்கு ரூ. 254 கோடி (இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ.1000 கோடி) தொகையை செலுத்தியது.
கடந்த ஆண்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ரூ. 2,850 கோடி ஒப்பந்தத்தில், METRO Cash & Carry India Pvt Ltd நிறுவனத்தின் மொத்த விற்பனை சங்கிலியை வாங்கியது.
ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, புதிய உரிமையாளருக்கு Metro AG வணிகத்தை நிர்வகிக்க சில சேவைகள் (Transition Services) மற்றும் உரிமங்களை (Licenses) வழங்குகிறது. இதனை Metro AG நிறுவனம் தனது ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது.
மெட்ரோ இந்தியாவின் விற்பனையின் ஒரு பகுதியாக, பிராண்டைப் பயன்படுத்துவதற்கான உரிமத்திற்காக 28 மில்லியன் யூரோக்கள் (சுமார் ரூ. 254 கோடி) செலுத்தியதாக ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 22, 2022 அன்று, மெட்ரோ இந்தியாவை ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தில் மெட்ரோ ஏஜி கையெழுத்திட்டது.
31 மொத்த விற்பனை அங்காடிகள், முழு ரியல் எஸ்டேட் போர்ட்ஃபோலியோ (6 அங்காடி இருப்பிடங்கள்) உட்பட, ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு மெட்ரோ இந்தியாவின் விற்பனை 11 மே 2023 அன்று வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Mukesh Ambani Reliance Industries, Reliance Retail, Metro AG, German Brand Metro AG