வரலாறு காணாத உச்சம் தொட்ட ரிலையன்ஸ் பங்குகள்... ஒரே நாளில் ரூ 41,000 கோடி சேர்த்த முகேஷ் அம்பானி
சந்தை மதிப்பின் அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம்.
ரிலையன்ஸ் நிறுவன பங்குகள்
வெள்ளிக்கிழமை ஒரே நாளில் ரிலையன்ஸ் நிறுவனம் அதன் சந்தை மதிப்பில் ரூ.41,860.54 கோடியைச் சேர்த்துள்ளது. ரிலையன்ஸ் பங்குகளின் மதிப்பு 2 சதவிகிதம் அதிகரித்து தேசிய பங்குச்சந்தையில் ரூ 2913க்கு முடிவடைந்த நிலையிலேயே இது சாத்தியமாகியுள்ளது.
இதேவேளை மும்பை பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் நிறுவன பங்குகள் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 2.18 சதவிகிதம் அதிகரித்து, பங்கு ஒன்றிற்கு ரூ 2,914.75 என முடிவடைந்துள்ளது.
அத்துடன் வெள்ளிக்கிழமை முழுவதும் ஏறுமுகத்தில் இருந்த ரிலையன்ஸ் பங்குகள் 3.40 சதவீதம் அதிகரித்து ரூ 2,949.90 என வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது.
தேசிய பங்குச்சந்தையில் 2 சதவிகிதம் அதிகரித்து ரூ 2,913 என பதிவாகியுள்ளது. இதனால் ஒரே நாளில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ 41,860.54 கோடி அதிகரித்து, மொத்த சந்தை மதிப்பு சுமார் ரூ 20 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்திய சந்தை மீண்டு வருவதற்கான அறிகுறியாகவே நிபுணர்கள் இதை பார்க்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |