முகேஷ் அம்பானியின் வீட்டு ஊழியர்களின் சம்பளம் மற்றும் சலுகைகள்! ஆன்டிலியாவில் எப்படி வேலைக்கு சேர்வது?
இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தனது ஊழியர்களுக்கு வழங்கும் முக்கிய சம்பளம் மற்றும் சலுகைகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
முகேஷ் அம்பானியின் சொகுசு வாழ்க்கை
இந்தியாவின் முன்னணி பணக்காரராக முகேஷ் அம்பானி இருப்பதோடு ஆசியாவிலும் பிரபலமான தொழிலதிபராக பார்க்கப்படுகிறார்.
இவரது இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை கிட்டத்தட்ட 5000 கோடி ரூபாய் செலவில் நடத்தி உலகையே வியப்பில் ஆழ்த்தினார்.
முகேஷ் அம்பானி, தனது குடும்பத்தினருடன் 15,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆன்டிலியாவில் வசிக்கிறார். இந்த 27 மாடி கொண்ட பிரம்மாண்ட மாளிகை உலகின் மிகவும் விலையுயர்ந்த வீடுகளில் ஒன்றாகும்.
சமீபத்தில், பிரயாகராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவில் தனது குடும்பத்தினருடன் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய இவருக்கு 2025 பிப்ரவரி 22 நிலவரப்படி, 91.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு உள்ளது.
இதன்மூலம் இந்தியாவின் முன்னணி பணக்காரராகவும், உலக பணக்காரர்களில் 17வது இடத்திலும் முகேஷ் அம்பானி உள்ளார் என போர்ப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முகேஷ் அம்பானியின் ஊழியர் சம்பளம் மற்றும் சலுகைகள்
முகேஷ் அம்பானியின் வீட்டில் பணிபுரியும் சமையல்காரர், ஓட்டுநர் போன்ற கடை நிலை ஊழியர்களுக்கு கூட லட்சக்கணக்கில் சம்பளம் வழங்கப்படுகிறது.
மேலும் இவர்கள் கார்ப்பரேட் ஊழியர்களைப் போன்ற சலுகைகளையும் தவறாமல் பெறுகிறார்கள்.
முகேஷ் அம்பானியின் வீட்டில் மட்டும் சுமார் 600 முதல் 700 ஊழியர்கள் பணி புரிகின்றனர்.
முகேஷ் அம்பானியின் தனிப்பட்ட ஓட்டுநரின் மாத சம்பளம் மட்டும் ரூ 2 லட்சம் ரூபாய் என தெரியவந்துள்ளது.
முகேஷ் அம்பானியின் பாதுகாவலர்களின் மாத சம்பளம் 14,536 ரூபாய் முதல் 55,869 ரூபாய் வரை தொடங்குகிறது.
ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
முகேஷ் அம்பானி வீட்டில் எப்படி வேலைக்கு சேர்வது?
முகேஷ் அம்பானியின் இல்லத்தில் வேலை பெறுவதற்கு தேர்வு மற்றும் நேர்காணலில் தேர்ச்சி பெற வேண்டும். அத்துடன் விண்ணப்பிக்கும் வேலைக்கான பொருத்தமான சான்றிதழ் அல்லது பட்டம் வைத்திருப்பது அவசியம்.
சமையல்காரராக விரும்பினால், சமையல் கலைகளில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பாத்திரம் கழுவும் பணியில் ஈடுபடுபவர்கள் கூட கடுமையான சோதனை மற்றும் சரிபார்ப்பு செயல்முறைக்கு உட்படுத்தப் படுகிறார்கள்.
வீட்டு பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு முதல் சமையல்காரர்கள் மற்றும் தனிப்பட்ட உதவியாளர்கள் வரை, ஒவ்வொரு ஊழியரும் வீட்டின் செயல்திறனையும், பிரம்மாண்டத்தையும் பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
முகேஷ் அம்பானியின் இந்த சொகுசு வாழ்க்கை மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் சலுகைகள், பலரையும் வியப்பில் ஆழ்த்துவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |