முகேஷ் அம்பானி ஓரண்டில் எவ்வளவு சம்பாதிக்கிறார்... அவரது சம்பளம் குறித்து வெளியான தகவல்
ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி, இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸைத் தலைமையேற்று நடத்தி வருகிறார்.
சம்பளம் கைப்பற்றவில்லை
முகேஷ் அம்பானி இதுவரை பல காரணங்களுக்காக செய்திகளில் தொடர்ந்து இடம்பிடித்து வந்துள்ளார். தற்போது, அவர் தனது சம்பளம் காரணமாக மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார்.
முகேஷ் அம்பானி தனது நிறுவனங்கள் எதில் இருந்து, கடந்த ஐந்து வருடங்களாக சம்பளம் எதுவும் கைப்பற்றவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அவருக்கு சொந்தமான பங்குகளில் இருந்து கிடைக்கும் ஈவுத்தொகையே அவரது முக்கிய வருவாய் ஆதாரமாக உள்ளது.
கோவிட் பெருந்தொற்று காலகட்டம் தொடங்கி இதுவரை அவர் சம்பளம் எதுவும் கைப்பற்றவில்லை என்றே கூறப்படுகிறது. கடந்த 2008 முதல் 2020 வரையில் ஆண்டுக்கு ரூ 15 கோடி சம்பளமாக அவர் பெற்று வந்தார்.
சுமார் 100 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்து மதிப்பு கொண்ட உலகின் 18வது பெரும் கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி தமக்கு சொந்தமான பங்குகளின் ஈவுத்தொகையில் இருந்தே வருவாய் ஈட்டுகிறார்.
ரூ.20 கோடி வரை
ரிலையன்ஸில் நேரடியாக 1.61 கோடி பங்குகளை அவர் வைத்திருக்கிறார், ஒரு பங்கிற்கு ரூ.5.50 என்ற விலையின் அடிப்படையில் ஈவுத்தொகையாக ரூ.8.85 கோடி ஈட்டுகிறார்.
அவர் கட்டுப்படுத்தும் விளம்பரதாரர் குழு நிறுவனங்கள் 664.5 கோடி பங்குகளை அல்லது 50.07 சதவீதத்தை சொந்தமாக வைத்து, ரூ.3,655 கோடி ஈவுத்தொகை வருமானத்தை வழங்குகின்றன.
முகேஷ் அம்பானி மட்டுமின்றி, அவரது மூன்று பிள்ளைகளும் அக்டோபர் 2023 முதல் சம்பளம் பெறுவதை விடுத்து, நிறுவனத்தின் ஆண்டு கூட்டத்தில் கலந்துகொள்ள கட்டணமாக ரூ 6 லட்சமும் கமிஷனாக ரூ 2.27 லட்சமும் பெறுகின்றனர்.
ஆனால் ஆனந்த் அம்பானி ரிலையன்ஸ் குழுவில் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளதை அடுத்து, இந்த நிதியாண்டில் ரூ.10 கோடி முதல் ரூ.20 கோடி வரை சம்பளம் பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |