அப்பா பெரும் பணக்காரர் என்றாலும் தனக்கென்று தனி பாணி.., ஆனந்த் அம்பானியின் சொத்து மதிப்பு
பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் சொத்து மதிப்பு பற்றிய விவரத்தை பார்க்கலாம்.
Anant Ambani
Reliance Industries Ltd தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சண்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
Reliance Group மூலம் மட்டும் 500க்கும் மேற்பட்ட நிறுவனங்களை Mukesh Ambani நடத்தி வருகிறார். இவருடைய சொத்து மதிப்பு அமெரிக்க டொலர் மதிப்பின் படி 111 பில்லியனை தாண்டும் அளவுக்கு உள்ளது. அதாவது, இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.91ஆயிரம் கோடிக்கும் அதிகமாகும்.
இவரின் இளைய மகன் தான் ஆனந்த் அம்பானி (Anant Ambani). இவர், 1995 -ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 -ம் திகதி மும்பையில் பிறந்தார். இவருடைய தந்தை பெரும் பணக்காரராக இருந்தாலும் தனக்கான பாணியில் பயணித்தார்.
அமெரிக்காவில் உள்ள Brown University பல்கலைக்கழகத்தில் பயின்றார். உடல்நலத்தில் அக்கறை கொண்ட இவர் 108 கிலோ எடையில் இருந்து 18 மாதங்களில் எடையை குறைத்து.
இவருக்கு ஆஸ்துமா பிரச்சனைகள் இருப்பதால் அதற்கான மருந்தை எடுத்துக் கொள்கிறார். இதனால், உடல் எடை மேலும் அதிகரித்துள்ளது.
சொத்து மதிப்பு (anant ambani net worth)
Reliance Industries Ltd -ன் எரிசக்தி வணிகத்தை ஆனந்த் அம்பானி வழிநடத்தி வருகிறார். மேலும், தாயார் நீடா அம்பானியுடன் சேர்ந்து மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணியையும் வழிநடத்துவதோடு, ஜியோ இயக்குநராகவும் 2 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
மேலும், கடந்த 2022 -ம் ஆண்டு மே மாதத்தில் Reliance Retail Ventures குழுமத்திலும் உறுப்பினராக மாறினார். இவருக்கு இந்த பொறுப்புகளில் சம்பளம் கிடையாது என்று கூறப்படுகிறது. ஆனால், முதலாளிக்கு உரிய அனைத்து சலுகைகளும் கிடைக்கும்.
ஆனந்த் அம்பானியின் சொத்து மதிப்பு மட்டுமே ரூ.33 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இவரது திருமண கொண்டாட்டத்திற்கு கலந்து கொள்ள உலக பிரபலங்கள் பலரும் வந்துள்ளதால் களைகட்ட தொடங்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |