ரூ 5,000 கோடியில் மகனுக்கு திருமணம்... இந்த 7 மாதங்களில் முகேஷ் அம்பானி சம்பாதித்த தொகை
முகேஷ் அம்பானி தமது இளைய மகன் திருமணத்தை ரூ 5000 கோடி செலவிட்டு கோலாகலமாக நடத்தி முடித்தாலும், இந்த 7 மாதங்களில் அவர் சம்பாதித்துள்ள தொகையின் கணக்கு வெளியாகி மலைக்க வைத்துள்ளது.
ரூ 5,000 கோடி
ஆசியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி தமது இளைய மகன் திருமணத்தை கோலாகலமாகவும் ஆடம்பரமாகவும் நடத்தி முடித்துள்ளார்.
மும்பை மாநகரில் அமைந்துள்ள Jio World Drive என்ற அவர்களின் வளாகத்திலேயே ஜூலை 12ம் திகதி ஆனந்த் அம்பானிக்கும் ராதிகாவுக்கும் திருமணம் நடந்துள்ளது. திருமண விழாவில் உலகெங்கிலும் இருந்து 2,000 விருந்தினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்திய மக்கள் மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் கவனிக்கப்பட்ட இந்த திருமணத்திற்கு முகேஷ் அம்பானி ரூ 5,000 கோடி செலவிட்டுள்ளதாக பல்வேறு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ரூ 5,000 கோடி என்பது முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பில் வெறும் 0.5 சதவிகிதம் மட்டுமே. தற்போதைய தரவுகளின் அடிப்படையில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பானது 121.2 பில்லியன் அமெரிக்க டொலராகும்.
22.5 பில்லியன் டொலர்
அதாவது ரூ 10 லட்சம் கோடிக்கும் அதிகம். மட்டுமின்றி, மகனின் திருமணம் முடிந்த சில நாட்களில், முகேஷ் அம்பானி சம்பாதித்த தொகை ரூ 25,000 கோடி என்றே கூறப்படுகிறது.
அத்துடன் ஜூலை 5ம் திகதி வெளியான தரவுகளில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 118 பில்லியன் டொலர் என பதிவாகியிருந்தது. ஆனால் தமது மகனின் திருமணம் முடிந்த சில நாட்களில் வெளியான தரவுகளில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 121.2 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேலும், ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டில், இந்த ஆண்டில் மட்டும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 22.5 பில்லியன் அமெரிக்க டொலர் அளவுக்கு அதிகரித்துள்ளதாகவே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |