67 வயதாகும் முகேஷ் அம்பானி... இந்த ஒரு விடயம் என்றாலே இப்போதும் பயம்
ஏப்ரல் 19ம் திகதி தமது 67வது பிறந்தநாளை கொண்டாடியுள்ள முகேஷ் அம்பானிக்கு, தற்போதும் இந்த ஒரு விடயம் என்றால் பயம்.
பயம் தொற்றிக்கொள்ளுமாம்
ஆசியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரராக அறியப்படும் முகேஷ் அம்பானி, தமது தந்தை தொடங்கிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து தற்போது ரிலையன்ஸ் சில்லறை வர்த்தகம் மற்றும் தொலைத்தொடர்பு இண்டஸ்ட்ரீஸ் என தமது தொழிலை விரிவு படுத்தியுள்ளார்.
திருபாய் அம்பானி தொடங்கிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்கள், அவரது மறைவுக்கு பின்னர் முகேஷ் மற்றும் அனில் அம்பானி சகோதரர்களால் பங்கு போடப்பட்டது.
தொடர்ந்து முகேஷ் அம்பானியின் தொழில் ஈடுபாடு காரணமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உச்சங்கள் தொட்டது. துணிச்சலான மற்றும் சவாலான பல முடிவுகளை எடுத்துள்ள முகேஷ் அம்பானிக்கு தற்போதும் ஒரு விடயம் என்றால் பயம் தொற்றிக்கொள்ளுமாம்.
ஊடகங்கள் முன்பு பேசியதில்லை
கொஞ்சம் கூச்ச சுபாவமுள்ள முகேஷ் அம்பானிக்கு மேடைப் பேச்சு என்றால் இப்போதும் பயம் தானாம் ஆனாலும், மிக சாதாரணமாக மேடையில் பேச அவர் முயற்சி மேற்கொள்வாராம்.
இந்தியாவிலேயே பெரும் கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி, சாதாரண வாழ்க்கை வாழவே ஆசைப்படுகிறாராம். சமூக ஊடகங்களில் அவர் பதிவிட்டதில்லை. சமூக, அரசியல் கருத்துகளையும் முகேஷ் அம்பானி எந்த காலத்திலும் ஊடகங்கள் முன்பு பேசியதில்லை.
தமது தந்தையின் வாழ்க்கை அனுபவங்களை எப்போதும் மேற்கோள் காட்டியே முகேஷ் அம்பானி பேசுவாராம். தந்தையுடன் பல ஆண்டுகள் தீவிரமாக பணியாற்றி வந்துள்ளதால் சமூக ஊடகங்களில் முகேஷ் அம்பானி ஆர்வம் காட்டவில்லை என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |