முகேஷ் அம்பானி, டாடா, அதானி... இவர்களில் அதிக வரி செலுத்தும் தொழிலதிபர் யார்?
இந்தியாவின் பெரும் தொழிலதிபர்களும், பெரும் கோடீஸ்வரர்கள் என அறியப்படும் முகேஷ் அம்பானி மற்றும் அதானி உள்ளிட்டவர்களில் யார் அதிக வரி செலுத்தியுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ரிலையன்ஸ் செலுத்திய வரி
ஆசியாவிலேயே பெரும் கோடீஸ்வரர் என அறியப்படுபவர் முகேஷ் அம்பானி. இவரது ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ 19.68 லட்சம் கோடிகள். இந்தியாவிலேயே மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக ரிலையன்ஸ் உள்ளது.
2023 நிதியாண்டில் ரிலையன்ஸ் நிறுவனம் செலுத்தியுள்ள வரி தொடர்பில் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் 2023 நிதியாண்டில் அரசாங்கத்திற்கு ரூ 20,713 கோடி வரியாக செலுத்தியுள்ளது.
இதனால் இந்தியாவிலேயே மிக அதிக வரி செலுத்தியுள்ள நபராக முகேஷ் அம்பானி மாறியுள்ளார். ரிலையன்ஸ் நிறுவனத்தை அடுத்து SBI மற்றும் HDFC வங்கிகள் அதிக வரி செலுத்தியுள்ளன.
முந்தைய நிதியாண்டில் SBI வங்கி ரூ 17,649 கோடி வரி செலுத்தியுள்ளது. இதேப்போன்று HDFC வங்கி ரூ 15,350 கோடி வரியாக செலுத்தியுள்ளது. டாடா குழுமத்தின் மென்பொருள் நிறுவனமான TCS கடந்த நிதியாண்டில் ரூ 14,604 கோடி வரி செலுத்தியுள்ளது.
லாபத்தை ஈட்டவில்லை
ICICI வங்கி ரூ 11,793 கோடி வரியாக செலுத்தியுள்ளது. 2018 முதல் ICICI வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக Sandeep Bakhshi செயல்பட்டு வருகிறார். நாராயண மூர்த்தியின் Infosys நிறுவனம் 2023 நிதியாண்டில் ரூ 9,214 கோடி வரி செலுத்தியுள்ளது.
இந்த நிறுவனம் உலகம் மொத்தம் 56 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவில் கொண்டாடப்பட்டுவரும் தொழிலதிபர்களில் ஒருவரான Gautam Adani கடந்த நிதியாண்டில் அதிக வரி செலுத்தியவர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களில் கூட இடம்பெறவில்லை.
அதானி குழுமம் கணிசமான சந்தை மதிப்பைக் கொண்டிருந்தாலும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் போன்ற அதே அளவில் லாபத்தை ஈட்டவில்லை என்றே விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |