முகேஷ் அம்பானியின் மூன்று சம்மந்திமார்கள் - அவர்களில் யாருக்கு சொத்து அதிகம் தெரியுமா?
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்டின் திருமணம் வருகிற 12 ஆம் திகதி மும்பை மாநகரில் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் அம்பானி குடும்பத்தின் ஒரு சில சுவாரஸ்ய தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றது.
ராதிகா, ஆகாஷ் அம்பானியை மணந்த ஷ்லோகா மேத்தா மற்றும் இஷா அம்பானியை மணந்த ஆனந்த் பிரமல் என்பவர்கள் பணக்கார குடும்பத்தில் இருந்தே வந்தவர்கள்.
இந்நிலையில் முகேஷ் அம்பானியின் மூன்று சம்மந்திமார்களின் பணக்காரர் யார் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
அஜய் பிரமல்
முகேஷ் அம்பானியின் சம்திகளில் அஜய் பிரமல்தான் பணக்காரர். அவர் 30 இற்கும் மேற்பட்ட நாடுகளில் சுகாதாரம் மற்றும் மருந்துத் தொழில்களில் செயல்படும் பிரமல் குழுமத்தின் தலைவர் ஆவார்.
இவருடைய மகன் ஆனந்த் பிரமல் தான் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியை மணந்தார். அஜய் பிரமாலின் நிகர மதிப்பு தோராயமாக $2.8 பில்லியன். அதாவது இந்திய மதிப்பில் ரூ.23,170 கோடி ஆகும்.
அருண் ரசல் மேத்தா
இந்தியாவின் முக்கிய தொழிலதிபரான அருண் ரஸ்ஸல் மேத்தா, முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானியை மணந்த ஷ்லோகா மேத்தாவின் தந்தை ஆவார்.
12 நாடுகளில் இயங்கும் புகழ்பெற்ற வைர நகை பிராண்டான Rosy Blue இன் நிர்வாக இயக்குநராக உள்ளார். இந்நிறுவனம் இந்தியாவில் உள்ள 26 நகரங்களில் 36 இடங்களைக் கொண்டுள்ளது.
அருண் ரஸ்ஸல் மேத்தாவின் நிகர மதிப்பு சுமார் ரூ.3,000 கோடி என கூறப்படுகிறது.
வீரன் மெர்ச்சன்ட்
முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியை ஜூலை மாதம் திருமணம் செய்யவிருக்கும் ராதிகா மெர்ச்சன்ட்டின் தந்தை தான் வீரன் மெர்ச்சன்ட்.
இவர் மருந்து தயாரிப்பு நிறுவனமான எEncore Healthcare நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். அவர் பல வணிகங்களுக்கு இயக்குனராகவும் பணியாற்றுகிறார்.
அவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.755 கோடி எனவும் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |