இந்திய வரலாற்றிலேயே மிகப் பெருந்தொகையை கடனாக வாங்கிய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ள முகேஷ் அம்பானி பெரும் பணக்காரர்களில் ஒருவர்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
2024 ஆம் ஆண்டு நிலவரப்படி அவரது நிகர சொத்து மதிப்பு 90 பில்லியன் டொலருக்கும் அதிகமென மதிப்பிடப்பட்டுள்ளது, இது அவரை இந்தியா மற்றும் உலக பணக்காரர்கள் வரிசையில் இடம்பெற செய்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தில் பெட்ரோ கெமிக்கல்ஸ், சுத்திகரிப்பு, எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளிட்டவையுடன் தொலைத்தொடர்பு மற்றும் சில்லறை வணிகமும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ரிலையன்ஸ் ஜியோ என்ற அவரது தொலைத்தொடர்பு வணிகம், இந்தியாவில் அலைபேசி வணிகத்தை மொத்தமாக மாற்றியது, அத்துடன் அவரது சொத்து மதிப்பையும் அதிகரிக்க செய்தது.
5 பில்லியன் டொலர்
வணிகத்தில் அம்பானியின் புத்திசாலித்தனம் மற்றும் எதிர்கால தொழில்நுட்பங்களில் முதலீடு, சுத்தமான எரிசக்தி மற்றும் சில்லறை வணிகம் ஆகியவை அவரது நிதித் திறனை இந்தியா மட்டுமன்றி உலகச் சந்தைகளிலும் முதன்மையானதாக பலப்படுத்துகின்றன.
ஆனால் 2023ல், முகேஷ் அம்பானி இந்தியாவின் வரலாற்றிலேயே மிகப்பெரிய பெருநிறுவனக் கடனைப் பெற்றார். நாடு முழுவதும் ஜியோவின் 5ஜி சேவையை விரிவுபடுத்தும் நோக்கில் 5 பில்லியன் டொலர் தொகையை, இந்திய மதிப்பில் ரூ 42,000 கோடி கடனாகப் பெற்றார்.
இந்தக் கடன் 60க்கும் மேற்பட்ட வங்கிகளால் ஆதரிக்கப்பட்டு இரண்டு தொடர்ச்சியான வெளிநாட்டு நாணயக் கடன்களாக அளிக்கப்பட்டது. வெளியான தகவலின் அடிப்படையில் வலுவான போட்டி காரணமாக, ரிலையன்ஸ் நிறுவனம் மேலும் 2 பில்லியன் டொலர்களை திரட்ட முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |