இரட்டைப் பேரக்குழந்தைகளுடன் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி! வைரலாகும் முதல் புகைப்படம்
இரட்டைப் பேரக்குழந்தைகளுடன் முகேஷ் அம்பானி இருக்கும் இனிமையான புகைப்படம் வைரலாகி வருகிறது.
இஷா அம்பானியின் இரட்டைக் குழந்தைகள்
ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரும், இந்தியாவின் பிரபல தொழிலதிபருமான முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் மகளான இஷா அம்பானி சமீபத்தில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.
இஷா அம்பானி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்ததைத் தொடர்ந்து, அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருணம் சமீபத்தில் பிரமாண்டமாக நடைஒப்பேற்றது. இதனால், அம்பானி குடும்பத்தில் இப்போது மகிழ்ச்சி நிரம்பி வழிகிறது.
அம்பானி குடும்பத்தைப் பற்றிய ஒரு விடயம் வெளியே தெரியவந்தால், அது சாதாரணமான விடயமாக இருந்தாலும் சமூக வலைதளங்களில் வைரலாகும். செல்வ செழிப்பான இந்த குடும்பத்தைப் பற்றி தெரிந்துகொள்ள சாமானியர்கள் விரும்புகிறார்கள். அவர்களைப் பற்றிய பல விடயங்களை கூகுளில் தேடுகிறார்கள்.
ஆனால் இப்போது ராதிகா மெர்ச்சண்ட்டும் ஈஷாவின் குழந்தைகளும் தான் இந்த குடும்பத்தில் ட்ரெண்டிங்.
உலகத்துக்கே தொழிலதிபர் - பேரக்குழந்தைகளுக்கு தாத்தா
ஈஷாவின் இரட்டைக் குழந்தைகளுடன் முகேஷ் அம்பானி இருக்கும் இனிமையான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உலக அளவில் பிரபலமான தொழிலதிபராக இருந்தாலும், பேரக்குழந்தைகளுக்கு அன்பான தாத்தாவாகத் தான் இருக்கிறார். பணத்தில் விளையாடும் முகேஷ் அம்பானி, தன் இயல்பினால், நடத்தையால் சாமானியர்களின் மனதைக் கவர்ந்தவர். அவர் தனது இரட்டைப் பேரக்குழந்தைகள் ஆதியா மற்றும் கிருஷ்ணாவுடன் விளையாடுவதைக் காணலாம்.
இஷா அம்பானியின் இரட்டையர்களின் முதல் புகைப்படம்
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் படம் இது. இந்த புகைப்படத்தில், தாத்தா முகேஷ் அம்பானி ஆதியாவை தூக்கி வைத்துள்ளார். மற்றொரு நபர் கிருஷ்ணனை பிடித்து வைத்திருப்பதாக தெரிகிறது.
Instagram @ambani_update
இந்த புகைப்படத்தை அம்பானி குடும்பத்தின் ரசிகர் பக்கம் ஒன்று வெளியிட்டுள்ளது. 19 டிசம்பர் 2022 அன்று, இஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமல் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தனர். இந்த குழந்தைகள் மும்பை வந்தடைந்ததும் அவர்களை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நாடு முழுவதும் இருந்து வந்திருந்த அர்ச்சகர்கள் அவருக்கு சிறப்பு பூஜை செய்தனர்.