நாளுக்கு ரூ 3 கோடி செலவிட்டால்... முகேஷ் அம்பானி சம்பாதித்தது மொத்தம் எத்தனை ஆண்டுகளில் தீர்ந்து போகும்?
ஆசியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரர் மற்றும் உலகின் 11வது செல்வந்தராக வலம்வரும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ 10.21 லட்சம் கோடி என்றே கூறப்படுகிறது.
நாளுக்கு ரூ 3 கோடி
முகேஷ் அம்பானி இந்தியாவில் மிகப்பெரிய வணிகராகவே பார்க்கப்படுகிறார். அவர் நாளுக்கு ரூ 3 கோடி செலவிடுவதாக இருந்தால், இதுவரை முகேஷ் அம்பானி சம்பாதித்த சொத்துக்கள் மொத்தம் செலவாவதற்கு 932 ஆண்டுகளும் 6 மாதங்களும் ஆகும் என்றெ கணக்கிடுகின்றனர்.
அதாவது அவர் சாதாரணமாக நாளுக்கு ரூ 3 கோடி செலவிடுவதாக இருந்தால், மொத்தம் 340,379 நாட்களில் அவரது மொத்த சொத்துக்களும் செலவிட்டுவிடுவார். ஆனால், முகேஷ் அம்பானியின் வருவாய் நாளும் அதிகரித்துவருவதால், அவரது சொத்துக்கள் தீர்ந்து போக பல நூற்றாண்டுகள் ஆகும் என்பதே நிஜம்.
வாய்ப்பில்லை
2024ல் மட்டும் இதுவரை அவர் ரூ 1.98 லட்சம் கோடி தொகையை தமது வருவாயாக ஈட்டியுள்ளார். மட்டுமின்றி, மகனின் திருமணத்திற்காக பல கோடிகளை செலவிட்டுள்ளார். அத்துடன், முகேஷ் அம்பானியின் ஒரு நாள் செலவு என்பது ரூ 3 கோடியாக இருக்கவும் வாய்ப்பில்லை என்றே கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |