முகேஷ் அம்பானியின் மனைவி நீதா தனியாக குவித்து வைத்திருக்கும் சொத்துக்கள்... அவரின் சொத்து மதிப்பு
பெரும் கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் மனைவி என்பதால், நீதா அம்பானி இந்தியாவில் அறியப்படும் முக்கிய பிரமுகர்களில் ஒருவராக உள்ளார்.
குஜராத்தி குடும்பத்தில் பிறந்த
மட்டுமின்றி, கல்வி, நன்கொடை, விளையாட்டு, தொழில் மற்றும் கலை போன்றவற்றில் தனது பங்களிப்பை செலுத்திவரும் வகையிலும் நீதா அம்பானி கவனிக்கப்பட்டுள்ளார்.
ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவராக நீதா அம்பானி செயல்பட்டு வருகிறார். 1964ல் குஜராத்தி குடும்பத்தில் பிறந்த நீதா அம்பானி, வணிகவியலில் இளங்கலை பட்டம் பெற்றார்.
தொடர்ந்து ஆசிரியராக பணியாற்றத் தொடங்கினார். அத்துடன், நீதா அம்பானி பயிற்சி பெற்ற பரதநாட்டிய நடனக் கலைஞராவார். 2010ல் நீதா அம்பானி ரிலையன்ஸ் அறக்கட்டளையை தொடங்கினார்.
இந்த அறக்கட்டளையின் மூலம், இந்தியாவில் கல்வி, விளையாட்டு மற்றும் பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றில் நீதா கணிசமான பங்களிப்பைச் செய்துள்ளார்.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியில்
விளையாட்டுத்துறையில் ஆர்வம் கொண்ட நீதா அம்பானி, Mumbai Indians கிரிக்கெட் அணிக்கு இணை உரிமையாளரானார். அத்துடன் கால்பந்து அணிகளை ஊக்குவிக்கவும் அமைப்பு ஒன்றை உருவாக்கினார்.
இந்தியாவில் விளையாட்டுத்துறையில் நீதா அம்பானியின் பங்களிப்பை அங்கீகாரம் செய்வது போன்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியில் மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.
2024ல் வெளியான தரவுகளின் அடிப்படையில், முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு என்பது 11,650 கோடி அமெரிக்க டொலர் என்றே கூறப்படுகிறது. நீதா அம்பானியின் சொத்து மதிப்பு ரூ 2,510 கோடி இருக்கலாம் என்றே கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |