இந்த நிறுவனத்தில் தனது ரூ.1645 கோடி முதலீட்டை வாராக்கடனாக அறிவித்த முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம், டன்சோவில் கிட்டத்தட்ட ரூ.1,645 கோடி முதலீட்டை தள்ளுபடி செய்துள்ளது.
டன்சோவால் ஆதாயம்
மூன்றாண்டுகளுக்கும் மேலாக டன்சோ நிறுவனத்தில் கிட்டத்தட்ட 26 சதவீத பங்குகளுடன் முகேஷ் அம்பானி நிறுவனம் செயல்பட்டு வந்துள்ளது. 2022ல் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் உட்பட 5 நிறுவனங்கள் டன்சோவில் சுமார் ரூ 1800 கோடியை முதலீடு செய்துள்ளனர்.
எதிர்வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் டன்சோவின் சந்தை மதிப்பு 60 பில்லியன் டொலரை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், வேகமாக சில்லறை விற்பனைச் சந்தையில் நுழைவதற்கான வாய்ப்பாக ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் டன்சோவைக் கண்டது.
மேலும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கும் டன்சோவால் ஆதாயம் இருக்கும் என்றும் நம்பப்பட்டது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக டன்சோ நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் போராடி வருகிறது.
நிறுவனத்தின் கடன்
மட்டுமின்றி, டன்சோ நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான கபீர் பிஸ்வாஸ் தமது பொறுப்புகளில் இருந்து விலகி Flipkart நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்கு வந்தார்.
இதன் சில மாதங்களுக்கு பின்னரே முகேஷ் அம்பானி ரூ 1,645 கோடியை வாராக்கடனாக அறிவித்துள்ளார். வெளியான தகவலின் அடிப்படையில், டன்சோவின் தற்போதைய முதலீட்டாளர்கள் நிறுவனத்தின் கடன்களை அடைத்து அடுத்த கட்டத்திற்கு வழி தேடுகிறார்கள் என்றே தெரிய வந்துள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தை அடுத்து 19.3 சதவீத பங்குகளுடன் கூகிள் இந்தியா நிறுவனம் டன்சோவில் மிகப்பெரிய பங்குதாரராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |