முகேஷ் அம்பானியின் இளைய மகனுக்கு அடித்த ஜாக்பாட்! என்ன தெரியுமா?
அமெரிக்க நிறுவனத்துடன் முதலீடு செய்யும் முகேஷ் அம்பானி.
இதை அவரின் இளைய மகன் அனந்த் அம்பானி நிர்வாகிப்பார் என தகவல்.
ரிலையன்ஸ் நிறுவனம் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய தீவிரமாக இறங்கியுள்ள நிலையில் அது தொடர்பான சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.
உலகில் உள்ள டாப் 10 கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள முகேஷ் அம்பானி அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் நிறுவனத்தின் பெரும் பகுதி பங்குகளை வாங்கத் திட்டமிட்டுள்ளார்.
அதன்படி அவரின் ரிலையைன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் SenseHawk Inc என்னும் அமெரிக்க நிறுவனத்துடன் முதலீடு மற்றும் பங்கு கைப்பற்றல் அடங்கிய திட்டத்தின் அடிப்படையில் 79.4 சதவீத பங்குகளைச் சுமார் 32 மில்லியன் டாலருக்கு வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.
constructionworld
SenseHawk நிறுவனம் 2018 ஆம் ஆண்டுக் கலிபோர்னியாவில் துவங்கப்பட்டுச் சோலார் எனர்ஜி உற்பத்தி துறையில் மென்பொருள் நிர்வாகச் சேவைகளை வழங்கி வருகிறது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 4வது முதலீட்டில் சுமார் 50 பில்லியன் டொலர் அளவிலான தொகையை முகேஷ் அம்பானி முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளார். இதை முகேஷ் அம்பானியின் இளைய மகனான அனந்த் அம்பானி நிர்வாகம் செய்து வருகிறார்.
இதன்மூலம் அவருக்கு ஜாக்பாட் அடித்தது என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் அந்த அளவுக்கு இதில் லாபம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
cnn