ஒரு நிமிடத்தில் தரையிறங்கிய முகேஷ் அம்பானியின் சொகுசு விமானம்
Mukesh Ambani’s BBJ Makes Brief Mumbai Flight: மும்பையில் முகேஷ் அம்பானியின் சொகுசு விமானம் வானில் ஒரு நிமிடம் மட்டும் பறந்து தரையிறங்கியதால் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஒரு நிமிடம் மட்டும் பறந்த முகேஷ் அம்பானியின் சொகுசு விமானம்
இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானிக்கு சொந்தமான அதிநவீன Boeing 737 MAX 9 BBJ ரக தனியார் விமானம், மும்பாயில் மிகக் குறுகிய நேரம் மட்டும் பறந்தால் விமான ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பதிவு எண் VT-AKV கொண்ட இந்த விமானம் வெறும் ஒரு நிமிட நேரத்தில் சுமார் 23 கடல் மைல் தூரம் பறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பராமரிப்பு நடவடிக்கை?
இந்த விமானம் மும்பையின் சத்திரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, நகரின் வான்வெளியைச் சுற்றி மீண்டும் அதே விமான நிலையத்தில் தரையிறங்கியது.
இந்த குறுகிய கால சுற்றுப்பாதை பறப்பு, வழக்கமான பயண சேவைக்காக அல்லாமல் தொழில்நுட்ப பரிசோதனை அல்லது பராமரிப்பு நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று விமானத் துறை வட்டாரங்கள் கருதுகின்றன.
மிக சொகுசான தனியார் விமானம்
Boeing Business Jet (BBJ) வகையைச் சேர்ந்த இந்த விமானம், உலகின் மிக சொகுசான தனியார் விமானங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. நீண்ட தூர பயணங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விமானத்தில் தனிப்பட்ட ஓய்வறைகள், கூட்ட அரங்குகள், படுக்கையறைகள் மற்றும் உயர்தர வசதிகள் இடம்பெற்றுள்ளன.
சமீப காலங்களில் இந்தியாவின் பணக்கார தொழிலதிபர்கள் மற்றும் நிறுவனங்கள் மேம்பட்ட தனியார் விமானங்களில் அதிக முதலீடு செய்து வருகின்றன. அதில் முகேஷ் அம்பானி-யின் Boeing 737 MAX 9 BBJ மிகவும் கவனிக்கப்படும் விமானங்களில் ஒன்றாகும்.
விமான கண்காணிப்பு தரவுகளின்படி, இந்த விமானம் ஒரு குறுகிய சுற்றுப்பாதை பறப்பை மேற்கொண்டது. இத்தகைய பறப்புகள் பொதுவாக விமானத்தின் தொழில்நுட்ப செயல்திறன், பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததா என்பதை உறுதி செய்தல் அல்லது குழுவினரின் பயிற்சி நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ளப்படுவது வழக்கமாகும்.
இருப்பினும், இந்த குறிப்பிட்ட பறப்பின் அதிகாரப்பூர்வ நோக்கம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |