பிறக்கும் போதே அதிர்ஷ்டம்! சமீபத்தில் பிறந்த முகேஷ் அம்பானி பேர பிள்ளைகள் தொடர்பில் சுவாரசிய தகவல்
முகேஷ் அம்பானியின் மகள் இஷாவுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ள நிலையில் பிறக்கும் போதே அவர்கள் எவ்வளவு செல்வந்தர்களாக பிறந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.
முகேஷ் அம்பானி மகளுக்கு இரட்டை குழந்தை
முகேஷ் அம்பானி - நீட்டா தம்பதியின் மகள் இஷாவுக்கும் தொழிலதிபர் ஆனந்த் பிரமலுக்கும் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பரில் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் இந்த தம்பதிக்கு கடந்த 19ஆம் திகதி இரட்டை குழந்தைகள் பிறந்தது.
அதில் ஒரு குழந்தை பெண். மற்றொரு குழந்தை ஆண் குழந்தையாகும். பெண் குழந்தைக்கு ஆதியா எனவும், ஆண் குழந்தைக்கு கிருஷ்ணா எனவும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக முகேஷ் அம்பானி குடும்பம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
bollywoodshaadis
அதிர்ஷ்டசாலிகள்
இந்த நிலையில் பிறக்கும் போதே ஆதியா - கிருஷ்ணா ஆகிய இருவரும் பெரிய அதிர்ஷ்டசாலிகள் என கூறும் வகையில் அவர்கள் பெற்றோர் தொடர்பிலான சில சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
இஷா அம்பானியின் தொழில் வாழ்க்கை
31 வயதான இஷா ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸின் நிர்வாக இயக்குனர் ஆவார். இஷாவின் தனிப்பட்ட மதிப்பு மட்டுமே $100 மில்லியன் என பல்வேறு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இஷா 2016 ஆம் ஆண்டில் ஓன்லைன் ஷாப்பிங் போர்ட்டலான அஜியோவை அறிமுகப்படுத்தியதோடு ஃபேஷன் சில்லறை விற்பனையில் ரிலையன்ஸின் இ-காமர்ஸ் முயற்சிக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இஷாவின் வீட்டின் மதிப்பு பல கோடிகள் ஆகும். இஷாவின் கணவரும் ஆதியா - கிருஷ்ணாவின் தந்தையுமான பிரமலின் சொத்து மதிப்பு மட்டும் $3 பில்லியன் ஆகும்.
ஆதியா - கிருஷ்ணாவின் சொத்துக்கள் குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை. அம்பானி மற்றும் பிரமல் குடும்பம் புதிய குடும்ப உறுப்பினர்களின் பெயரில் சில சொத்துக்களை பெயரிடலாம்.
india.postsen