இன்னும் 10 நாட்களில் பெரிய செய்திக்காக காத்திருக்கும் முகேஷ் - நீதா அம்பானி: கசிந்த தகவல்
முகேஷ் - நீதா அம்பானி தம்பதி விரைவில் ஏற்பாடு செய்யவிருக்கும் ஒரு பெரிய நிகழ்வு தொடர்பில் ஊடக கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.
இரண்டாவது கொண்டாட்டம்
ஆசியாவிலேயே பெரும் கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி அவரது இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோருக்கு திருமணத்திற்கு முந்தைய இரண்டாவது கொண்டாட்டத்தை நடத்த திட்டமிட்டு வருகிறார்.
ஏற்கனவே மார்ச் 1- 3 திகதிகளில் குஜராத்தின் ஜாம் நகரில் முதல் கொண்டாட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதில் திரை பிரபலங்கள், உலகின் பெரும் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள், அரசியல்வாதிகள் என பலர் கலந்துகொண்டனர்.
தற்போது இரண்டாவது கொண்டாட்டத்தை மே 28- 30 திகதிகளில் சொகுசு கப்பல் ஒன்றில் நடத்த உள்ளனர். இத்தாலியில் இருந்து புறப்படும் இந்த கப்பலானது 800 சிறப்பு விருந்தினர்களுடன் தெற்கு பிரான்சில் சென்றடைய உள்ளது.
மறக்க முடியாததாக மாற்ற
600 ஊழியர்களை விருந்து பரிமாற ஏற்பாடு செய்துள்ளனர். மே 28ம் திகதி இத்தாலியில் இருந்து புறப்படும் இந்த கப்பலானது 4380km கடந்து பிரான்ஸ் செல்கிறது. ஜாம் நகரில் நடந்த கொண்டாட்டத்திற்கு சுமார் ரூ 1,200 கோடி செலவானதாக கூறப்படுகிறது.
அறுசுவை விருந்துக்கான செலவு மட்டும் ரூ200 கோடி என்கிறார்கள். முகேஷ் அம்பானியும் நீதா அம்பானியும் தங்கள் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண கொண்டாட்டங்களை மறக்க முடியாததாக மாற்ற தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகின்றனர்.
இதனாலையே, மே 28ம் திகதிக்காக மொத்த அம்பானி குடும்பமும் காத்திருப்பதாக கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |