ஒரே இன்னிங்சில் முதல் சதம் அடித்த மூன்றாவது வீரர்: தென் ஆப்பிரிக்கா 577 ரன் குவிப்பு
வங்காளதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 577 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது.
டோனி டி ஸோர்ஸி 177
Chattogramயில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணியில் மூன்று வீரர்கள் தங்கள் முதல் சதத்தை பதிவு செய்தனர்.
ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (Tristan Stubbs) 106 ஓட்டங்களும், டோனி டி ஸோர்ஸி 177 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அதனைத் தொடர்ந்து வெர்ரென்னே (0), ரிக்கெல்டன் (12) ஆட்டமிழக்க, வியான் முல்டர் மற்றும் செனுரன் முத்துசாமி இருவரும் நங்கூர ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
வியான் முல்டர் முதல் டெஸ்ட் சதம்
சிக்ஸர்களை பறக்கவிட்ட வியான் முல்டர் (Wiaan Mulder) முதல் டெஸ்ட் சதம் அடித்தார். மறுமுனையில் செனுரன் முத்துசாமி முதல் அரைசதத்தை பதிவு செய்தார்.
A maiden Test ton for Wiaan Mulder 💯#WTC25 | 📝 #BANvSA: https://t.co/HBelBeKCRc pic.twitter.com/nrU2SRMPFW
— ICC (@ICC) October 30, 2024
அணியின் ஸ்கோர் 575 ஆக உயர்ந்தபோது தென் ஆப்பிரிக்கா டிக்ளேர் செய்தது. முல்டர் 105 ஓட்டங்களுடனும், செனுரன் 68 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
அதன் பின்னர் களமிறங்கிய வங்காளதேச அணி 32 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |