இலகுவான முறையில் முள்ளங்கி சட்னி செய்வது எப்படி?
பொதுவாகவே அனைவருக்கும் தோசை மற்றும் இட்லி சாப்பிடுவது விருப்பம். அதற்கு சட்னி தான் பெரும்பாலும் செய்யப்படும்.
அந்தவகையில் அனைவருக்கும் பிடித்த மற்றும் ஆரோக்கியமான முள்ளங்கி சட்னி செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- எண்ணெய் - 3 தேக்கரண்டி
- முள்ளங்கி - 2 நறுக்கியது
- வெங்காயம் - 1 நறுக்கியது
- தேங்காய் - 1/2 கப் நறுக்கியது
- கறிவேப்பிலை
- புளி
- கல்லுப்பு - 1 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- எண்ணெய் - 1 தேக்கரண்டி
- தனியா - 2 மேசைக்கரண்டி
- சீரகம் - 2 தேக்கரண்டி
- சிவப்பு மிளகாய் - 8
தாளிப்பு செய்ய
- எண்ணெய்
- கடுகு
- சீரகம்
- சிவப்பு மிளகாய் - 1
- பெருங்காயத்தூள்
- கறிவேப்பிலை
செய்முறை
1. முதலில் ஒரு கடாயை எடுத்து எண்ணெய் விட்டு, முள்ளங்கியை சிறு துண்டுகளாக நறுக்கி இரண்டு நிமிடம் அதிக தீயில் வதக்கவும்.
2. 2 நிமிடம் கழித்து வெங்காயத்தை நறுக்கி இரண்டு நிமிடம் வதக்கவும். பின்னர் தேங்காய் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.
3. ஒரு நிமிடம் கழித்து சிறிது கறிவேப்பிலை, சிறிது புளி, கல்லுப்பு, சிறிது மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். பின்னர் முழுவதுமாக ஆறவிடவும்.
4. இப்போது மற்றொரு சிறிய கடாயை வைத்து எண்ணெய், கொத்தமல்லி, சீரகம், மிளகாய் சேர்த்து சிவப்பு மிளகாய் நிறம் மாறும் வரை வறுத்து, ஒரு தட்டில் எடுத்து முழுவதுமாக ஆற வைக்கவும்.
5. இப்போது மிக்ஸி ஜாரில் முன் வறுத்த தனியா, சீரகம் மற்றும் சிவப்பு மிளகாய் சேர்த்து நன்கு அரைக்கவும். பிறகு வறுத்த முள்ளங்கி மற்றும் வெங்காயம் தேங்காய் கலவையை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.
6. ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், சிவப்பு மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து கலந்துவிட்டு சட்னியில் சேர்க்கவும்.
7. சுவையான முள்ளங்கி சட்னி தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |