முள்ளிவாய்க்கால் கண்ணீர் கதை; இன்றுடன் 14 ஆண்டுகள்
தமிழ் மக்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 14ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் தமிழர் தாயகப் பரப்பிலும், புலம்பெயர் தேசங்களிலும் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இதில், முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த இறுதிப் போரின் போது தனது உறவுகளை தவிக்கு உறவினர்கள் பங்கேற்று தனது அஞ்சலியை செலுத்தவுள்ளனர்.
அத்தகைய மாறா நினைவுகளில் இருந்து மக்கள் இன்றும் வெளிவரவில்லை என்பதற்கு இந்த நினைவேந்தல் நிகழ்வு ஒர் உதாரணமாக தான் உள்ளது.
முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தது
உயிர்நீத்த தனது உறவுகளுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு பொதுச்சுடரேற்றப்பட்டது. இந்த பொதுச்சுடரேற்றத்தை ஒரே குடும்பத்தில் 13 பேரை இழந்த தாய் ஒருவர் ஏற்றி வைத்தார்.
அத்தோடு இந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்ற உறவுகள் கதறி அழுது, கண்ணீர் சொரிந்து உணர்வெழுச்சியுடன் இந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்றனர்.
பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அஞ்சலி
ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மரியாதை செலுத்தியுள்ளனர்.
வாழ்க்கை முழுவதும் இந்த வலியோடு போராடிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே உயிரை பறிக்கொடுத்த சொந்தங்கள் வாழ்ந்துவருகின்றனர்.
மேலும் நமது குழுவினர் சென்று பாதிக்கப்பட்டவர்களின் கருத்துகளைக்கேட்ட போது அவர்கள் கூறிவற்றை கேட்க கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.