ருத்ரதாண்டவமாடி 50 பந்தில் சதம் விளாசிய வீரர்
பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் முல்தான் சுல்தான்ஸ் அணி வீரர் உஸ்மான் கான் சதம் விளாசினார்.
ராவல்பிண்டியில் நடந்து வரும் PSL தொடர் போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் மற்றும் முல்தான் சுல்தான்ஸ் அணிகள் மோதி வருகின்றன.
இஸ்லாமாபாத் அணி நாணய சுழற்சியில் வென்று பந்துவீச்சை தெரிவு செய்ததால், முல்தான் சுல்தான்ஸ் முதலில் துடுப்பாடியது.
Clear the fence! ?#HBLPSL9 | #KhulKeKhel | #IUvMS pic.twitter.com/TWCpR3tLz1
— PakistanSuperLeague (@thePSLt20) March 10, 2024
தொடக்க வீரர்கள் யாசிர் கான் 16 பந்துகளில் 33 ஓட்டங்களும், ரிஸ்வான் 17 பந்துகளில் 20 ஓட்டங்களும் விளாசினர்.
அடுத்து உஸ்மான் கான் மற்றும் சார்லஸ் அதிரடி பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்த கூட்டணி 86 ஓட்டங்கள் குவித்தது.
18 பந்துகளில் 3 சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 42 ஓட்டங்கள் விளாசிய சார்லஸ் ஆட்டமிழந்தார்.
Usman Khan and Johnson Charles are dealing in ????? at the moment in Rawalpindi! ??#HBLPSL9 | #KhulKeKhel | #IUvMS pic.twitter.com/ENzprabBLV
— PakistanSuperLeague (@thePSLt20) March 10, 2024
பின்னர் இஃப்திகார் அகமது 13 ஓட்டங்களில் வெளியேறினார். மறுமுனையில் சிக்ஸர், பவுண்டரிகள் என தெறிக்கவிட்ட உஸ்மான் கான் 50 பந்துகளில் 3 சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 100 ஓட்டங்கள் குவித்தார்.
இதன்மூலம் முல்தான் சுல்தான்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 228 ஓட்டங்கள் குவித்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |