ஸ்டீவ் ஸ்மித் டக்அவுட்: தெறிக்கவிட்ட ஷான் மசூட்..முல்தான் சுல்தான்ஸ் அபார வெற்றி
PSL போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கராச்சி கிங்ஸை வீழ்த்தியது.
பிலிப், மசூட் கூட்டணி
கராச்சி கிங்ஸ் மற்றும் முல்தான் சுல்தான்ஸ் அணிகளுக்கு இடையிலான PSL போட்டி நடந்தது.
முதலில் களமிறங்கிய முல்தான் சுல்தான்ஸ் அணியில் ஸ்டீவன் ஸ்மித் டக்அவுட் ஆனார். அடுத்து கைகோர்த்த ஜோஷ் பிலிப் மற்றும் ஷான் மசூட் கூட்டணி தெறிக்கவிட்டது.
ஜோஷ் பிலிப் 23 பந்துகளில் 44 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார். பின்னர் அவைஸ் ஜாபர் 36 ஓட்டங்கள் விளாசினார்.
சிக்ஸர்களை பறக்கவிட்ட ஷான் மசூட் (Shan Masood) 25 பந்துகளில் 46 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அதனைத் தொடர்ந்து வந்த வீரர்கள் சொதப்ப, மொஹம்மது இம்ரான் 8 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 26 ஓட்டங்கள் விளாச முல்தான் சுல்தான்ஸ் அணி 207 ஓட்டங்கள் குவித்தது.
முல்தான் சுல்தான்ஸ் வெற்றி
கடினமான இலக்கினை நோக்கி களமிறங்கிய கராச்சி கிங்ஸ் அணி தொடக்கத்தில் தடுமாறினாலும், ரீஸா ஹென்ரிக்ஸ் 49 ஓட்டங்களும், அப்பாஸ் அப்ரிடி 34 ஓட்டங்களும் விளாசினர். அணித்தலைவர் மொயீன் அலி போரடி 27 ஓட்டங்கள் எடுத்தார்.
எதிர்பாராத விதமாக ஹசன் அலி அதிரடியில் மிரட்டி ஆட்டத்தின் போக்கை மாற்றினார். எனினும் கடைசி ஓவரின் 4வது பந்தில் அவர் ரன்அவுட் ஆனார்.
இதன்மூலம் கராச்சி கிங்ஸ் 196 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனார். ஹசன் அலி 10 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 23 ஓட்டங்கள் விளாசினார். மின்ஹாஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |