முல்தானி மெட்டியை பயன்படுத்தி இருக்கீங்களா? அப்போ இதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்!
முல்தானி மிட்டியானது எண்ணெய்த் தன்மையை நீக்கி, சருமத்திற்கு ஆரோக்கியத்தை தவறாமல் கொடுகின்றது.
இயற்கையாகவே கிடைக்கும் இந்த களிமண்ணை முகப்பரு மற்றும் பிற தோல் பிரச்சினைகளுக்கு ஓர் தீர்வாக பயன்படுத்தலாம்.
முல்தானி மிட்டியைப் பற்றி மேலும் அறியவும், உங்கள் தோல் மற்றும் முடி இரண்டிலும் அதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை பற்றி விரிவாக தெரிந்துக்கொள்ள இதை தொடர்ந்து படிக்கவும்.
முல்தானி மிட்டி என்றால் என்ன?
முல்தானி மிட்டி ஒரு இயற்கை அழகுப் பொருளாகும். இது பாகிஸ்தானில் உள்ள முல்தானில் இருந்து உருவானது.
இது களிமண் போன்ற தோற்றத்தைக் கொண்டுள்ளது, ஆனால் களிமண்ணை விட மிகவும் மெல்லியதாக இருக்கும்.
முல்தானி மிட்டியை எப்படி பயன்படுத்துவது?
முல்தானி மெட்டியுடன் தயிர் சேர்த்து தலையில் பூசி, 15 நிமிடங்கள் வைத்து முடியை கழுவினால், உடல் குளிர்ச்சியடையும் மற்றும் பொடுகு தொல்லையும் குறையும்.
காய்த்து எடுக்காத பால், முல்தானிமெட்டி சேர்த்து முகத்திற்கு பூசினால், வறண்ட சருமம் சீராகும்.
முகத்தில் அதிகளவான முகப்பரு இருந்தால், ரோஸ் வாட்டர் மற்றும் முல்தானி மெட்டி சேர்க்கலாம்.
உடலிற்கு மசாஜ் வேண்டுமென்றால், எண்ணெயை உடல் முழுவதும் பூசி அதன் மேல், முல்தானி மெட்டி, ரோஸ் வார்ட்டர், கடலை மா மற்றும் மஞ்சள் சேர்த்து உடலிற்கு பூசினால் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.
மேலும் இது தொடர்பாக மேலும் தெரிய வேண்டுமென்றால் இந்த வீடியோவை பார்க்கவும்.