ஹீரோயின் போல் பளபளப்பான சருமத்திற்கு இந்த ஒரு மா போதும்
பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள்.
ஆனால் முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
அந்தவகையில், வீட்டிலிருந்தபடியே சரும பிரச்சனைகள் நீங்கி, முகம் பளபளக்க முல்தானி மிட்டி மா ஒன்று போதும்.
தேவையான பொருட்கள்
- முல்தானி மெட்டி- 2 ஸ்பூன்
- ரோஸ் வாட்டர்- 2 ஸ்பூன்
- எண்ணெய் பசை சருமத்திற்கு- எலுமிச்சை சாறு
- வறண்ட சருமத்திற்கு- தேன்
தயாரிக்கும் முறை
முதலில் ஒரு பவுலில் முல்தானி மெட்டியை ரோஸ் வாட்டருடன் சேர்த்து பேஸ்ட் போல் உருவாக்க வேண்டும்.
அதன்பின் சிறிது தேன் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
பயன்படுத்தும் முறை
முதலில் பேஸ்பேக்கை பயன்படுத்துவதற்கு முன்பு முகத்தை நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.
அதன்பிறகு விரல் நுனிகளை கொண்டு கண் பகுதியை தவிர்த்து முகம் மற்றும் கழுத்தில் தடவவும்.
சுமார் 15-20 நிமிடங்களில் உலர விட்டு தண்ணீரை கொண்டு முகத்தை கழுவ வேண்டும்.
பின் முகத்தை துடைத்து அதன்பிறகு சருமத்திற்கு ஏற்ற மாய்ஸ்சரைசரை தட வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |