உடனடியாக முகம் வெள்ளையாக மாற இந்த ஒரு மாவு போதும்.., எப்படி பயன்படுத்துவது?
முகத்தில் பருக்கள் உண்டான பிறகு ஏற்படும் கரும்புள்ளிகள் முகத்தின் அழகை கெடுக்கும் விதமாக உள்ளன.
மேலும், சூரிய கதிர்கள் போன்றவற்றால் முகம் மற்றும் உடம்பு பொலிவிழந்து கருப்பாக மாறுகின்றன.
இயற்கையான முறையில் முகத்தை வெள்ளையாக மாற்ற முல்தானி மிட்டியை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பீட்ரூட் சாறு - 1 ஸ்பூன்
- தயிர் - 1 ஸ்பூன்
- முல்தானி மிட்டி - 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் பீட்ரூட் சாறு, முல்தானி மிட்டி மற்றும் தயிர் சேர்த்துக் கொள்ளவும்.
பின் மூன்றையும் நன்றாகக் கலந்து, மென்மையான பேஸ்ட்டைத் தயாரிக்கவும்.
அடுத்து இந்த பேஸ்டை முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் உலர வைக்கவும்.
அதன் பின்னர் முகத்தை வெதுவெதுப்பான நீரை கொண்டு கழுவவும்.
இந்த பேக்கை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முகம் விரைவிலேயே வெள்ளையாக மாறத்தொடங்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |