முகப்பரு வராமல் தடுக்க உதவும் முல்தானி மிட்டி.., எப்படி பயன்படுத்துவது?
அதிகப்படியான சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள், பருக்கள் போன்ற பாதிப்பு ஏற்படுகின்றன.
இயற்கையான முறையில் முகம் மற்றும் உடலை பளபளப்பாகவும் பொலிவாகவும் மாற்ற முல்தானி மிட்டி ஒன்று போதும்.
அந்தவகையில், முகப்பரு வராமல் தடுக்க உதவும் முல்தானி மிட்டியை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தக்காளி சாறு- 2 ஸ்பூன்
- முல்தானி மிட்டி- 2 ஸ்பூன்
- சந்தன பொடி- 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- 1 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் தக்காளி சாறு, முல்தானி மிட்டி, சந்தன பொடி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்துக்கொள்ளவும்.
அடுத்து இதனை நன்றாக பசை போல கலந்துகொள்ளவும்.
பின்னர் இதனை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் அப்படியே ஊறவிடவும்.

இதற்கடுத்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவிக்கொள்ளலாம்.
இந்த முல்தானி மிட்டி பேக்கை வாரத்திற்கு ஒரு முறை என தொடர்ந்து பயன்படுத்தி வர முகம் நன்கு பளபளப்பாக மாறும்.
மேலும், இந்த பேக்கை தொடர்ந்து பயன்படுத்தி வர முகப்பரு வராமல் தடுக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |